Featured Post

ஸௌராஷ்ட்ர ஸுளு க்ரியா வல்லரி

ஸ்ரீரஸ்து ஸௌராஷ்ட்ர ஸுளு க்ரியா வல்லரி லிக்கெயொ என்.எ.எஸ். ரெங்க3ய்யான் பரிஷ்ருதம் டி.எஸ்.வெங்கடாசல ஸர்மொ மது4ரொ எக மோல் ஒண்டொ கலொ 1916   ஸ்ரீரஸ்து ஸௌராஷ்ட்ர ஸுளு க்ரியா வல்லரி ஸ்லோக் க்ரியாபநொ மெனத்தேடு தா4து பஸ்னு ப்ரயோகு3நு பு4ங்க்லோரூ டீப்குதாஸ்ஸாமூ லிங்கு3 கீ3ந்தெ3ஸ்வுவேலுநு உஸுகின் வெஸி ஹோஸ்ஸெத்லொ ஸுகின்ஸுன் மத்4யமாதி3னும் எஸீகின் யாஸீ கே3காலு கே3ம்விநா லிங்குபே4து3நீ: ஔதகாலுகு அந்தைகொ உகின்வெ உத்தமாகவை இநு மைதா2மு தைதா2மு நிர்லிங்கு3ம் ப3ஹுகேகவை || ஸ்ரீரஸ்து ஸௌராஷ்ட்ர ஸுளு க்ரியாவல்லரீ ஸௌராஷ்ட்ரும் தெ2வ்ட3க்ரியாநுகு தா4துக் கால பே4து3ன் விவரின் ஸங்க3த்திஸாநு கோ4ஷணொ. தா4துன் தி3ய்யொ ப்ரதா4நதா4து - பகுதி ஸஹாயதா4து - விகுதி ப்ரதா4நதா4து ஸஹாயதா4து க்ரியா பூர்த்தி ஜ ………….. வாஸு ……………….ஜவாஸு ஸி ……….. எஸி…………………….ஸியெஸி க2 ----------வாயி …………………க2வாயி க்ரியாபூர்த்தி வினைமுற்று காலுந் தீ2ந்யொ வர்தமாநகாலு - நிகழ்காலம் பூ4த காலு - இறந்தகாலம் ப4விஷ்யத்காலு - எதிற்காலம் வர்தமான காலு ஸு வெஸி ஸு ஸுன் ஸு ஸுன் ஸு ஸு பூ4தகாலு எஸி யாஸி எஸி யாஸி எஸி யாஸி இஸி யாஸி எஸி யெஸி ப4வ

ஸௌராஷ்ட்ர எழுத்தின் சிறப்பு

ஸௌராஷ்ட்ர எழுத்தின் சிறப்பு

லோகும் கொ3வ்ளொ ஸொகந் தே3வு
லைடொ3 கள்யவ்ந ரக்ஷிவெது
4க்துநுக் மதி3மெக் தே3ஸு
க்ஷுல்நொ தெகஹால்தெநு             

 

இடையன் கால்நடைகளை தன்னுடன் கூட்டிக் கொண்டு அவைகளுக்கு மேய்ச்சல் நிலத்தைக் காண்பிப்பது போல , கடவுள் மனிதர்களுக்கு நேரடியாக உதவிகளைச் செய்வதில்லை . மனிதர்களுக்கு தெளிந்த அறிவைத் தந்திருக்கிறார் . அந்த அறிவைக் கொண்டு மனிதர்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.

 

தை3வத்தநொண்ட்யேஸ் பு2ர்ந

மெநிக்யத்தந் மிளிந் ஹொநொ

தி3ய்யொ மிள்நாத்தொ காமஸ்கொ

ஹோநகை பூர்தி ஸத்தம.

 

கடவுள் மனிதனுக்கு நல்லவை செய்ய வேண்டும் என உறுதி பூணுகிறது. கடவுளது எண்ணத்தை நிறைவேற்ற மனிதனும் முயற்சிக்க வேண்டும். கடவுளின் அருள் , மனிதனின் முயற்சி ஆகிய இரண்டும் சேராமல் எந்தவித செயலும் முழுமை அடையாது.

 

தை3வத்தநவி நல்லாநும்

மிளைமெநி ஸுதி3ந் ஸதா3

ஹட்விலிந் கோ3 மெநிக்யத்தந்

கெர்லஸுந் கரெ ஹோத்திஸொ.

 

கடவுளின் அருள்பெற வேண்டு மெனில் விடாமுயற்சி வேண்டும் என்பதை நன்கு அறிந்த அறிஞர் உணர்வர். அவ்வாறேவிடாமுயற்சிசெய்து அறிஞர்கள் கடவுளின் அருளைப்பெற்று தங்கள் இலக்கை அடைவர் என்பது உறுதி. மேதாவி தொ.மு.ராமராய் அவர்கள் இயற்றிய ஸௌராஷ்ட்ர நீதிஸம்பு நூலின் முதல் மூன்று சுலோகங்களில் உள்ளவைதான் மேலே குறிப்பிட்டப் பட்டுள்ளவை.

மொழியும் அதற்குரிய எழுத்தும் எப்போது தோன்றியது ? அவைகளை மனித குலத்திற்கென கடவுள் நேரடியாக வந்து அளித்தாரா எனில் இல்லை. மனிதகுலம் பேசப்பழகுவதற்கு முன்னர். அந்தந்த இடங்களில் கிடைத்த எழுது கருவிகளைக் கொண்டு சித்திர வடிவ வாயிலாகத் தங்கள் கருத்தைப் பிறருக்கு உணர்த்தியுள்ளனர். கொஞ்சம் கொஞ்சமாக பேச்சு முறை வந்து வளர்ந்து மொழி உண்டான பின்பு ஓவிய வடிவங்கள் சுருங்கி எழுத்து முறை உருவாயிற்று . மனித குலம் ஆங்காங்கே வாழ்ந்த இயற்கை சூழலுக்கு ஏற்ப மொழியின் ஒலி வடிவங்களும் ஒலி வடிவங்களுக்கேற்ப வரிவடிவங்களும் அமையப்பெற்றன. அந்த வரிவடிவங்களும் கொஞ்சம் கொஞ்சமாக மாறுதலடைந்து செம்மைப்படுத்தப் பெற்றன. எந்த ஒரு எழுத்து முறையும் காலதேச வர்த்தமானப் பிரகாரம் மாறுதல் அடையும் என்பது அறிஞர்களின் கருத்து . தமிழ்மொழி 2000 ஆண்டுகள் பழமையானது . அம்மொழி துவக்கத்தில் பிராம்மி எழுத்துகளால் எழுதப்பட்டது. பின் வட்டெழுத்துகளால் எழுதப்பட்டு வந்தது. சோழர்கள் காலத்தில் அதாவது கி.பி. 13 , 14 ஆம் நூற்றாண்டுகளில் அறிமுகப்படுத்தப்பட்ட தற்போதைய வரிவடிவத்தில் தமிழ் இப்பொழுது எழுதப்படுகிறது. எகார, கார நெடில் உயிர்கள் அதனதன் எழுத்தின் மேல் புள்ளியிட்டு காட்டப்பட்டன . 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வீரமாமுனிவர் எனப் பெயர் பூண்ட கார்டுவெல்போப் தான் ஏகார ஓகார உயிர் எழுத்துகளுக்கு தற்போதுள்ள தனிவரிவடிவத்தை உண்டாக்கினார். இவ்வளவு ஏன், ஈ.வே.ரா. பெரியார்தான் 

வரிவடிவங்களை ணா , றா , னா , ணை , லை , ளை , னை என சீர்திருத்தி அமைத்து வழிகாட்டி மாற்றியுள்ளார் . எழுத்தச்சன் உருவாக்கிய மலையாள வரிவடிவ எழுத்தில் உகர மற்றும் ஊகார எழுத்துகளுக்கு தற்போது தமிழில் உள்ளவை போன்ற தனி வரிவடிங்கள் இருந்தன . ஆனால் இப்பொழுது உகர மற்றும் ஊகராங்களுக்கு தனித்துணைக் குறிகள் உருவாக்கப்பட்டு மலையாள மொழி எழுதப்படுகிறது. ஆங்கில மொழி கையெழுத்திற்கென ஒருவித எழுதுமுறையும் அச்சு எழுத்திற்கென வேறு ஒருவித எழுதுமுறையும் கொண்டது . அந்த ஆங்கிலமும் கணினியின் பயன்பாட்டிற்காக தற்போது பல்வேறு வடிவமாற்றங்களுடன் பயன்படுத்தப் பெறுவதை அனைவரும் அறிவர். அச்சு, தட்டச்சு மற்றும் கணினி பயன்பாட்டிற்கு ஏற்ப எழுதும் முறையில் 'நாகரி' யும் மாற்றங்களை ஏற்றுக் கொண்டுள்ளது . கை கொண்டு வாகாக எழுதப்பட்ட நாகரி கூட்டெழுத்துக்களின் மெய்யெழுத்துக்கள் தனி மெய்யெழுத்துகளாக தற்சமயம் எழுதப்படுகின்றன என்பதை நாகரியை நன்கு அறிந்தோர்க்குத் தெரியும் . இந்திய மொழிகளில் அச்சில் ஏற்றப்பட்ட முதல் மொழி தமிழ் மொழியே . நாகரி , குஜராதி , பஞ்சாபி , வங்காளி , ஒரியா , கன்னடம் , தெலுங்கு , மலையாளம் ஆகிய மொழிகளில் உள்ள கூட்டெழுத்து முறையைக் கொண்டிராமல் தமிழ் தனித்தனி எழுத்துகளைக் கொண்டு எழுதப்பட்டு வந்ததே இதற்கு காரணம் எனக் கொள்ளலாம்.

 

தமிழ் , மலையாளம் , ரோமன் , நாகரி எழுத்துகளைப் போன்றே தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப சீர்திருத்தம் பெற்றுள்ளதைப் போலவே ஸௌராஷ்ட்ர எழுத்தும் காலத்திற்கேற்ப சீர்த்திருத்தங்கள் அடைந்துள்ளன .

ஜக3து ஸரபாடி சல்லந் ஜு2கு ஸிக்கிந்

ஸிக்குநாந் ஞான்நீ:த் தெநு. -  ஸங்குராம்

 உலகத்தோ டொட்ட வொழுகல் பலகற்றும்

 கல்லார் அறிவிலா தார். - வள்ளுவர்

 

சென்னை கிறிஸ்துவக் கல்லூரியில் ஸம்ஸ்க்ருத பேராசிரியராக பணியாற்றிய பண்டித சதுர்வேதி லக்ஷ்மணாசாரியாரால் 1876 - ல் ஸௌராஷ்ட்ர அக்ஷராவளி , ஸௌராஷ்ட்ர வத்தாவளி , ஸௌராஷ்ட்ர ஸப்3தா3வளி மற்றும் ஸௌராஷ்ட்ர லகு4ஸங்க்2யாவளி என்ற நான்கு புத்தகங்கள் இயற்றப்பட்டு சென்னை ஸௌராஷ்ட்ர சமாஜத்தினரால் வெளியிடப்பட்டன . ஸௌராஷ்ட்ர மொழிக்கென முதன்முதலாக எழுத்தினை கண்ட ஸௌராஷ்ட்ரலிபி பிதாமகன் இவர்தான் . இவர் உருவாக்கிய எழுத்துமுறை கையினால் மட்டுமே எழுதுவதற்கான வாகைக் ( System ) கொண்டது . மேலும் இந்நான்கு புத்தகங்களும் லித்தோகிராப் முறையில் அச்சடிக்கப்பட்ட புத்தகமாகும் . இருட்டறையில் உள்ள ஒருவர் தன்முகத்தை தானே காண இயலாத நிலையில் , நல்லவெளிச்சத்தில் கண்ணாடி கிடைத்து தன் முகத்தை தானும் , பிறரும் காணும் முகமாக பண்டித சதுர்வேதி லக்ஷ்மணாசாரியார் ஸௌராஷ்ட்ர லிபியை உருவாக்கிக் கொடுத்துள்ளார் என அக்ஷராவளி புத்தகத்தின் வாயிலாக அன்னார் சென்னை ஸௌராஷ்ட்ர சமாஜத்தினரால் பாராட்டப் பெறுகிறார் .

 

பண்டித சதுர்வேதி லக்ஷ்மணசாரியார் அவர்கள் 1876 - ல் தான் உருவாக்கிய லிபியை திருத்தியமைத்து சற்று மாறுபட்ட வடிவத்தில் 1879 - ல் ஸௌராஷ்ட்ராக்ஷருன் என்ற புத்தகத்தையும் 1880 - ல் ஸௌராஷ்ட்ராணாதி என்ற புத்தகத்தையும் இயற்றி வெளியிட்டுள்ளார்.

அக்ஷராவளி (1876) ஸௌராஷ்ட்ர புஸ்தக பக்கம் 16&17

ஏதா4ந் ஸர்வத்ர ஸ்திரிலிங்கு3ம் மெள்ளி ஜந்லன ஸே . ஸௌராஷ்ட்ர பா4ஷாம் லிங்கு3ன் டீக் ஹாலுஸி ஜந்லதொஸே ஜுடி3கந்தும் ஸர்வத்ர விகல்புகின் லம்ப3வை . ஹலந்து ஸப்தா3ங்குமெள்ளி அந்தும் அகராஷ ராமஸப்து3 ஸோந் விகல்புரவை . ஸந்தும் ஸர்வத்ராம் தெ3ந்த ஸந்து மாத்ரம் விகல்புரவை . ஸௌராஷ்ட்ர பா4ஷொ இத்கதி3 லெந்து ஹந்தா3ரும் த3ர்பனௌ ஹாதுமு லீலி ஸெய்லியே ஸொக ஹொதிஸி . அத்த திஸா ஹந்தா3ருன் ஜவட3ந் ப்ரயத்த பொடி3 ”அக்ஷராவளி மெநஸ்தாந் புஸ்தௌ ப்ரஸித்3தி3 ஹோன் பொடெ3ஸி . ஏ ப்ரயத்நம் ப்ரீசர்சி ஸென்ட்ரல் காலேஜ்ஸம்ஸ்க்ருத ப்ரதா4ன் பண்டி3து ஹொயஸ்தான் ஸ்ரீமத் சதுர்வேதி3 ஸ்ரீநிவாஸாசார்யான் மெள்ளி மிளிகிந் ஸாப2ல்யுந் ஹொயெஸி. ஸௌராஷ்ட்ர முக்2ய ஸமாஜி தொ3ப்பென்.முனி. ஸேஷய்யங்கா3ருன் மத்ராஸ் ஹூன காப்து3 - 1876 .

ஸௌராஷ்ட்ராக்ஷருந் (1879) அட்டைபக்கம் & 13,15 பக்கம்



 









மேதாவி இராமராய் அவர்கள் பண்டித சதுர்வேதி லக்ஷ்மணாசாரியார் உருவாக்கிய லிபியை எழுத்துக்களை கோர்த்து அச்சிடுவதற்கு வசதியாக (Moveable Types) லிபியை செம்மைப்படுத்தி 1899 - இல் ஸௌராஷ்ட்ர பை2ல் எனும் ஸௌராஷ்ட்ர பிரைமர் புத்தகத்தை இயற்றி வெளியிட்டார் . தான் இயற்றி 1900 - ல் தெலுங்கு எழுத்தில் பதிப்பித்து வெளியிட்ட நீதி ஸம்பு என்ற நூலை, மேதாவி இராமராய் 1902 - ல் ஸௌராஷ்ட்ர எழுத்தில் பதிப்பித்து வெளியிட்டார் . மதுரை ஸௌராஷ்ட்ர வித்யா கோஷ்டியினருக்காக 1903 - ல் ஸௌராஷ்ட்ர முதலாம்பாட புத்தகம் மற்றும் இரண்டாம் பாடபுத்தகம் ஆகிய இருபாட புத்தகங்களை மேதாவி இராமராய் இயற்றி வெளியிட்டுள்ளார். 1905 - இல் ஸௌராஷ்ட்ர வ்யாகரண சல்லாபு என்ற ஸௌராஷ்ட்ர இலக்கண நூலையும் வெளியிட்டுள்ளார். மேற்காணும் புத்தகங்களில் கையாண்ட எழுத்துவடிவங்களை நன்கு செம்மைப்படுத்தி மேதாவி இராமராய் அவர்கள் இன்றைக்கு நூறு ஆண்டுகட்கு முன்பு 1906 - ல் ஸௌராஷ்ட்ர போதினி என்ற நூலை வெளியிட்டார். இதனை தொடர்ந்து 1908 - ல் ஸௌராஷ்ட்ர நந்தி நிகண்டு என்னும் ஸௌராஷ்ட்ர அகராதி நூலை (DICTIONARY) வெளியிட்டார். 1915 இல் மேதாவி இராமராய் அவர்களின் மாணவரான பண்டித டி.எஸ் . வெங்கடாசலஸர்மா அவர்கள் ஸந்த்4யா வந்த3னம் என்ற ஸம்ஸ்க்ருத அனுஷ்டான நூலை ஸௌராஷ்ட்ர மற்றும் தெலுங்கு எழுத்தில் பதிப்பித்து ஒரே புத்தகமாக வெளியிட்டுள்ளார்.

 




ஸௌராஷ்ட்ர பா4ஷாம் - ஜீவுன் 12 - , , , , , , , , , , , ஔ ஸௌராஷ்ட்ரபா4ஷாம் - ஔணுந் 6 - ரு ரூ லு லூ அம் அஹ

ஸௌராஷ்ட்ர பாஷாம்கௌணுன் 420  , 2, 3 , 4 , , , 2 , , 2 , , , 2 , 3 , 4 , , , 2 , 3 , 4 , , , 2 , 3 , 4 , , , , , , , , , , , க்ஷ.

மேதாவி இராமராய் அவர்களின் சீடரான ஸ்ரீ என்.ஏ.எஸ் . ரங்க அய்யர் அவர்களால் இயற்றப்பட்டு,

ஸ்ரீ பி.எம் . நரசிம்ம ஸர்மா மற்றும் ஸ்ரீ டி.எஸ் . வெங்கடாசலஸர்மா ஆகியோரால் சரிபார்க்கப்பெற்று 1916 - ல் ஸௌராஷ்ட்ர பாலபோதினி பாடநூல் வெளியிடப்பட்டது .

அரும்பாடுபட்டு , 1876 முதல் 1916 வரையுள்ள நாற்பதாண்டு காலத்தில் மிக்க முயற்சியோடும் பெரும்பொருட் செலவிலும் நமது முன்னோர்கள் உருவாக்கிய ஸௌராஷ்ட்ர எழுத்துக்களை வார்த்தெடுக்கும் மேட்ரிக்ஸையும் (MATRIX) மற்றும் உருவாக்கிய எழுத்துக்களையும் (TYPES) இதற்கு பிந்தைய காலகட்டத்தில் தொலைநோக்கு அற்ற நாகரி எழுத்து ஆர்வலர்கள் உருக்கி அழித்தொழித்தனர் என்பதும் அதன் காரணமாக புதுவேகத்துடன் வளர்ந்து கொண்டிருந்த மொழி வளர்ச்சி இடைக்காலத்தில் தடைப்பட்டது என்பதும் சோக வரலாறு . புத்தகத்தை வெளியிட அச்செழுத்துக்கள் இல்லாத நிலையில் , மதுரை ஸௌராஷ்ட்ர வித்யா பீடத்தினரால் ஸ்ரீ O.K. இராமானந்தம் அவர்களை ஆசிரியராகக் கொண்டு கூட்டெழுத்துக்கள் தவிர்த்த தனி எழுத்துக்களை கொண்டு மீண்டும் லித்தோகிராப் முறையில் 1961 - ல் ராமராய் ஸௌராஷ்ட்ர வாசகம் என்ற முதல்பாட புத்தகம் வெளியிடப்பட்டது . இதனை தொடர்ந்து கடந்த இருபது ஆண்டுகளில் ஸௌராஷ்ட்ர , தமிழ் எழுத்துக்களைக் கொண்டு திண்டுக்கல் , ஸ்ரீ க.கி.சந்திரசேகரன் அவர்களால் ஸௌரா எனும் ஸௌராஷ்ட்ர பாடப்புத்தகமும் , 2000 - ஆம் ஆண்டு மே திங்களில் மதுரை ஸ்ரீ தாடா சுப்பிரமணியன் அவர்களால் ஸௌராஷ்ட்ர மொழியில் ஸௌராஷ்ட்ர எழுத்தில் ஸௌராஷ்ட்ர பாடமாலா  என்ற புத்தகங்களும் இயற்றி வெளியிடப் பட்டுள்ளன . கடந்த 30 ஆண்டுகளாக பாஷாபிமானி மாத இதழ் ஸ்ரேஷ்ட ஸௌராஷ்ட்ர ஸாஹித்ய சபாவினரால் வெளியிடப்பட்டுக் வருகிறது . ஸௌராஷ்ட்ர எழுத்தை பரப்புவதையே தலையாய கடமை எனக்கொண்டு ஸ்ரீ பொஸடின் ரா.கணேஷ் அவர்களால் 2005 ம் ஆண்டு ஆகஸ்டு திங்கள் முதல் " ஜீக்3 " மாத இதழ் வெளியிடப்படுகிறது .

 

பண்டித சதுர்வேதி லக்ஷ்மணாச்சாரியாரும் , மேதாவி இராமராய் அவர்களும் ஸம்ஸ்க்ருத மொழியை நன்கு கற்ற பண்டிதர்கள் . ஆங்கிலம் மற்றும் தெலுங்கு போன்ற இந்திய மொழிகளில் புலமை பெற்றவர்கள் . ஆகவே ஸௌராஷ்ட்ர மொழியில் உள்ள அனைத்து ஒலிகளையும் நன்கு வெளிக் காண்பிக்கும் வகையில் ஸௌராஷ்ட்ர மொழிக்கென எழுத்துகளை படைத்திட்டனர் . தமிழில் உள்ள , ஒ என்ற உயிர் எழுத்துகளுக்கும் , , , ன ஆகிய மெய்யெழுத்துகளுக்கும் எழுத்துகள் நாகரியில் கிடையாது . நாகரி நெடுங்கணக்கில் உள்ள பல எழுத்துகளுக்கு உரிய எழுத்துகள் தமிழில் இல்லை . ஸௌராஷ்ட்ர மொழிக்கே உரிய சார்பெழுத்துகள் தமிழிலோ , நாகரியிலோ அல்லது ரோமனிலோ கிடையாது . ꢥꢾꢳꢶ ꢱꣁꢒ ꢬꢴꢵꢡ꣄ꢡꢾ ꢥꢴꢥ꣄ꢥ ꢭꢴꣁꢮꣁ ꢪꢴꢳꢶ ꢩꢹꢛꢶꢬ꣄ ꢡꢶꢬꢱ꣄ꢡꢾ ꢒꢶꢱꣁ ? ( எறிகுழல் போலும் சிறுசெம்மீன் தரைமீது நீந்துவது எங்ஙனம் ? ) என்ற ஸௌராஷ்ட்ர வாக்கியத்தை தமிழெழுத்தில் எழுதினால் நெளி சொக ராத்தெ நன் மளி பூஞிர் திரஸ்தெ கிசொ என்று தான் வாசிக்கலாம் . இதே வாக்கியத்தை नेळि सोक र्हात्ते न्हन्न ल्होवो म्हलि तिरस्ते किस ? என்று நாகரியில் எழுதினால் ஸம்ஸ்க்ருதம் மட்டுமே அறிந்தவர் நேளி ஸோக ரா:த்தெ ம:ளி பூ4ஞிர் திரஸ்தெ கிஸ ?” என வாசிப்பர், ஹிந்தி மட்டும் அறிந்தவர் நேலி ஸோக் ரா:த்தே ம்ஹளி பூஞிர் திரஸ்தே கிஸ் ?” என வாசிப்பர் . எந்தவொரு மொழியையும் அம்மொழிக்குரிய எழுத்துகளை கொண்டுதான் சரியாக, திருத்தமாக எழுதவும் இயலும் என்பதை இவ்வெடுத்துக்காட்டின் வாயிலாக தெள்ளத் தெளிவாக அறியலாம் .

அனைத்து ஸௌராஷ்ட்ர எழுத்துகளும் ஒரே முயற்சியில் எழுதக்கூடியவை. உதாரணமாக என்பதை ஸௌராஷ்ட்ர மொழியில் என ஒரே முயற்சியில் (Single effort) எழுதுகிறோம் . நாகரியில் எனும் இவ்வெழுத்தை (3| ¯ ) என நான்கு முயற்சியில் எழுதவேண்டும் . எந்தவொரு எழுத்தையையும் குறைந்தளவு முயற்சிகள் தேவைப்படுகிறது . இதனால் காலவிரயம் அதிகம் . ஸௌராஷ்ட்ர உயிரொலிகளுக்குரிய துணைக்குறிகள் எழுத்தின் இடப்புறமே எழுதப்படுகிறது . நாகரியில் का என இடப்பக்கமும் , कि என வலப் பக்கமும் , कु என எழுத்திற்கு கீழும் के என எழுத்திற்கு மேலும் உயிர்குறிகள் இடப்படுகின்றன .

நாகரியின் கூட்டெழுத்து முறையும் ஒழுங்கற்றதாகும் . कड्मल  என்ற சொல்லில் மற்றும் என்ற அகர உயிர்மெய்கள் மெய்யெழுத்தாக உச்சரிக்கப்படுகிறது . लग्डि என்ற சொல்லில் இதே மற்றும்   என்ற எழுத்துகள் உயிர்மெய்யாகவே உச்சரிக்கப்படுகிறது . நாகரியில் உயிர் , உயிர்மெய் , உயிர்மெய் குறிகளுடன் மேற்கொண்டு கூட்டெழுத்து எனப்பட்டாலும் தனித்த ஒரு எழுத்தாக எழுதப்படும் பிணை எழுத்துகள் 200 க்கும் அதிகமாக உள்ளன . இதன் காரணமாக நாகரி எழுத்துமுறையில் மிகக் கூடுதலான எழுத்துகளை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியதாகிறது . ஸௌராஷ்ட்ர நெடுங்கணக்கில் கூட்டெழுத்து முறை மிகவும் எளிமையானது . ஸௌராஷ்ட்ர மொழியில் கூட்டெழுத்து என்பது ஒன்றோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட மெய்யொலிகளையும் ஒரேயொரு உயிரொலியை தெரிவிக்கும் வகையில் தனித்தனி குறிகளால் எழுதப்படும் தொகுப்பெழுத்துகளாகும் . கூட்டெழுத்தில் உள்ள இறுதி மெய்க்குறி மட்டுமே உயிரொலியை கொள்ளும் என்ற விதியை அடிப்படையாக கொண்டு எழுதப்படுவது . ష్a ꢂꢰ ( அஷ்ட ) என்ற சொல்லில் என்ற கூட்டெழுத்தில் ( ஷ ) மெய்யாகவும் . ( ட ) மெய்யொலிக்குறி அகர உயிரொலியை ஏற்று உயிர்மெய்யாக உச்சரிக்கப்படுகிறது . அதாவது கூட்டெழுத்தின் கடைசிக்குறி எழுத்து மட்டுமே உயிர்மெய்யாக உச்சரிக்கப்படுகிறது .

அச்சு இயந்திரங்கள் , கம்ப்யூட்டர் ஆகிய பொறிகளின் வாயிலாக நாகரி எழுத்தினை கையாளும் போது நிறைய நடவடிக்கைகள் ( FUNCTIONS ) தேவைப்படுகின்றன . ஸௌராஷ்ட்ர எழுத்து முறையில் அவ்வாறு தேவையில்லை , குறைந்த நடவடிக்கைகளே போதுமானது . ஸௌராஷ்ட்ர எழுத்துகளும் , எழுத்து முறையும் விஞ்ஞானபூர்வமாகவும் எளிதாகவும் அமையப்பெற்றுள்ளதால் , நர்ஸரியில் பயிலும் குழந்தைகள் கூட நாகரியை காண்கிலும் இவ்வெழுத்து களையும் , எழுத்து முறையையும் எளிதில் தெளிவாக புரிந்துகொண்டு மிக விரைவில் எழுதப்படிக்க கற்றுக் கொள்வர் . நாகரி , ஸம்ஸ்க்ருத மொழியை எழுதுவதற்கு உருவாக்கப்பட்ட எழுத்துமுறையாகும் . நாகரி எழுத்தை பயன்படுத்துவதால் ஹிந்திக்கோ , மராத்திக்கோ எவ்வித சிறப்பும் கிடையாது. நடுவனரசின் ஆட்சிமொழியாதலாலும் , இந்தியாவின் பெரும்பான்மை மக்களால் பேசப்படுவதாலும் ஹிந்திமொழி வேற்றுமொழியாளர்களால் அடையாளம் கண்டு கொள்ளப்படுகிறது . இந்திய நாட்டில் மராத்தி மொழி பேசுவோர் தொகை , தமிழ்மொழி பேசுவோர் தொகையைக் காட்டில் கூடுதல் . எனினும் மராத்தி மொழி நாகரியில் எழுதப்படுவதால் , அம்மொழி பேசப்படும் மராத்திய மாநிலத்தில் தவிர வேற்று மாநிலங்களில் அம்மொழி தனித்தன்மையையோ அடையாளத்தையோ பெறவில்லை . மஹாராஷ்ட்ரத்தை தவிர்த்து இந்தியாவின் பிறபகுதிகளில் வாழும் மராத்தியரும் அவர்களது சொந்த மொழிப் பத்திரிக்கைகளை வாங்கிப் படிப்பதில்லை . காரணம் , அவைகளை எடுத்த எடுப்பிலேயே ஹிந்திப் பத்திரிக்கைகள் என தவறாக நினைத்து வாங்காது விட்டுவிடுகின்றனர் . மராத்தி மொழி விளம்பரங்களை இந்தியாவில் பொது இடங்களில் வெளியிடுவதிலும் இவ்வித இடர்பாடுகள் ஏற்படுகின்றன . மராத்தி விளம்பரங்களை ஹிந்தி விளம்பரங்கள் என நினைத்து படிப்பவர்கள் , விளம்பரத்தின் பொருள் விளங்காகாரணத்தினால் அவைகளை புறக்கணித்து விடுகின்றனர் . மராத்தி மொழியினரோ , அவைகள் ஹிந்தி விளம்பரங்கள் என மேம்போக்காகவே கருதி புறக்கணித்து விடுகின்றனர் . எவ்வகையிலும் இழப்பை அடைவது மராத்தி மொழிதான் . தம்மொழிக்கென இருந்த மோடி லிபியை கைவிட்டு , நாகரி லிபியை கைக் கொண்டதால் தம்மொழிக்கான தனித்தன்மையை இழந்தது குறித்து மராத்தியரும் குறிப்பாக மராத்திய பத்திரிகையாளர்களும் தற்போது நன்கு உணரத் துவங்கியுள்ளனர் . மோடி எழுத்திற்குப் பதிலாக நாகரி எழுத்தை பயன்படுத்தியதின் விளைவாக , மராத்திய குழந்தைகள் படிப்படியாக மராத்தி சொற்களை மறந்து அதற்குப்பதிலாக ஹிந்திச் சொற்களை பயன்படுத்த தொடங்கிவிட்டனர் . இந்நிலையினால் மராத்தியர்கள் , தம்மொழி திரைப்படங்களை பார்ப்பதை விடுத்து ஹிந்தி திரைப்படங்களுக் செல்கின்றனர் . இந்நிலை நீடித்தால் மராத்திய மொழியும் , கலையும் அழியும்நாள் வெகு தொலைவில் இல்லையென பிரபல மராத்தி திரைப்பட இயக்குநர் மறைந்த திரு . வி . சாந்தாராம் அவர்கள்தாம் வாழ்நாளின் போதே மனம் வெதும்பி கவலையை வெளியிட்டுள்ளார்

தெலுங்கு மொழி , அந்தஸ்துடன் இருந்தபோது பல ஸௌராஷ்ட்ர இலக்கியங்கள் தெலுங்கு எழுத்தில் படைக்கப்பட்டன . அவ்வாறு படைக்கப்படவே தெலுங்குச்சொற்கள் நிறைய அளவில் ஸௌராஷ்ட்ர மொழியில் கலந்துவிட்டதை நாம் யூகிக்கலாம் . கவிச்சக்கரவர்த்தி மகான் வேங்கடஸூரி அவர்கள் ஸௌராஷ்ட்ர ஸங்கீத ராமாயண காவியத்தை தெலுங்கு எழுத்தில் படைத்தார் . அவர் வாழ்ந்த காலத்தில் ஸௌராஷ்ட்ரர் பலருக்கு தெலுங்கு இரண்டாவது தாய்மொழியாகவே இருந்தது . தெலுங்கு மொழி தனது செல்வாக்கை தமிழ்நாட்டில் இழந்துவிட்ட நிலையில் , தெலுங்கு எழுத்தை பயன்படுத்தாத ஸௌராஷ்ட்ர இனத்தினரால் தெலுங்கு எழுத்தில் அச்சிடப்பெற்ற மகான் வேங்கடஸூரியின் ஸங்கீத ராமாயணப் புத்தகம் , தெலுங்குப் புத்தகம் என கருதப்பட்டு பரணில் தூக்கியெறியப்பட்டு அழிந்தொழியும் நிலையை அடைந்தன . மொழிப்பற்றாளர்கள் அப்புத்தகத்தை அழியும் நிலையிலிருந்து மீட்டெடுத்து , யுத்த காண்டத்தை தவிர அக்காவியத்தின் மற்ற ஐந்து காண்டங்களை பகுதி பகுதியாக தமிழெழுத்தில் மீண்டும் அச்சடித்து வெளியிட்டுள்ளனர் . யுத்தகாண்டம் இன்னமும் தெலுங்கு எழுத்திலேயே உள்ளது . புத்தகமாக தமிழில் வரவில்லை . ஸௌராஷ்ட்ர காவியங்கள் அதன் சொந்த லிபியை விடுத்து வேற்று மொழி எழுத்தில் அச்சிப்பட்டதின் விளைவே இந்த அவல நிலை என ஒவ்வொரு ஸௌராஷ்ட்ரரும் நன்கு உணர வேண்டும் . இந்தியாவின் தலைசிறந்த மொழியியல் அறிஞரான டாக்டர் சுநீதிகுமார் சாட்டர்ஜி அவர்கள் துவக்க காலத்தில் , எல்லா இந்திய மொழிகளும் நாகரி எழுத்தை பயன்படுத்துவதை ஆதரித்தவர் . ஆனால் அதனால் ஏற்படும் பின்விளைவை நன்கு சிந்தித்து சொந்த எழுத்துகள் உள்ள மொழிகள் நாகரி எழுத்தினைப் பயன்படுத்த மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார் . நாகரி எழுத்தை வங்காளி , தமிழ் போன்ற பிற மொழிகள் பயன்படுத்தினால் , ஹிந்தி மொழியற்ற இந்திய மொழிகளின் மீது விரும்பத்தகாத மேலாதிக்கத்தை செலுத்தும் எனவும் , செலுத்துவதால் இந்திய தேசிய ஒருமைப்பாடே குலைந்துவிடும் என தமது வங்காள மொழியின் தோற்றமும் வளர்ச்சியும் என்ற புத்தகத்தில் அறிஞர் சுநீதிகுமார் சாட்டர்ஜி தெரிவித்துள்ளார் . தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான கேரள மாநிலத்தில் பேசப்படும் மொழி மலையாளம் . சுமார் 400 ஆண்டுகளுக்குள் உருவான இளமையான மொழி . கொடுந்தமிழ் சொற்களோடு ஸமஸ்க்ருத சொற்களின் பயன்பாடு அளவுக்கு அதிகமானதின் காரணமாக உண்டான மொழி . அம்மொழிக்கான எழுத்து இன்றைக்கு சுமார் 250 ஆண்டு காலத்திற்கு முன் உருவாக்கப்பட்டது . தமிழையும் , ஸ்மஸ்க்ருதத்தையும் நன்கு கற்ற எழுத்தச்சன் என்ற அறிஞர் மலையாளத்திற்கென தமிழ் அல்லது நாகரி எழுத்து அல்லாத ஆர்ய லிபி என்ற புதிய எழுத்தினை படைத்திட்டவர் . அறிஞர்களின் சிந்தனை ஒன்று போலவே அமையும் . தங்களது மொழிக்கென புதிய எழுத்தை படைத்தளித்த எழுத்தச்சனை மலையாளிகள் போற்றி பாராட்டுகின்றனர் . தனக்கென மகவு இல்லாதோர் மட்டுமே தத்து எடுப்பர் . சொந்த மகவு உள்ளோர் . தம்மக்களை போற்றி பாதுகாத்து அவர்களை அறிவும் ஆற்றலும் கொண்டு வாழ வழி செய்கின்றனர் . தனித்த எழுத்தில் படைக்கப்பட்டதின் காரணமாகவே ஸௌராஷ்ட்ர மொழி இலண்டனில் உள்ள இந்திய நூலகத்தில் பணிபுரிந்த ஆங்கிலேயரான ஸ்ரீ ஹெச்.என்.ராண்டேலை கவர்ந்தது . கவரவே ஸௌராஷ்ட்ர மொழியை பயின்றார் . பயின்று ஸௌராஷ்ட்ர நீதி ஸம்புவின் வளமையை போற்றி அக்காவியத்தை உலகத்தினர் அனைவரும் உய்த்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தெழுதி வெளியிட்டார் .

 எலி வளையானலும் தனி வளை வேண்டும் . சொந்த வீடு உடையோர்க்கு தான் மரியாதையுடன் முகவரியும் சேர்ந்து கிடைக்கும் . எத்துணை செல்வந்தர் சொந்த வீட்டை புறக்கணித்துவிட்டு வாடகை வீட்டிலோ அல்லது விடுதியிலோ வசிப்போர் மரியாதையை எதிர்பார்ப்பது அறிவீனம் . தனி மனிதனுக்கு பொருந்தும் இச்சட்டம் , மொழிகளுக்கும் அதனைப் பேசும் இனத்தாருக்கும் பொருந்தும் . இன்றைக்கு 130 ஆண்டுக்கு நமது முன்னோர்கள் அரும்பாடுபட்டு நம்மொழிக்கென சொந்த எழுத்துக்களை அற்புதமாக உருவாக்கி கொடுத்துள்ளனர் . முன்னோர்கள் தம் சந்ததியினருக்கென நஞ்சை , புஞ்சை , மனை , வீடு போன்ற அசையா செல்வங்களையும் ,கால்நடைகள் , நகைகள் அசையும் செல்வங்களையும் சம்பாதித்து விட்டு செல்கின்றனர் . தமக்கென விட்டுச்சென்ற செல்வத்தை பாதுகாத்து அதனை பன்மடங்காக்கி மேலும் வளமோடு வாழ்ந்து எல்லோரும் நல்லன புரிவதே , சந்ததியினர் தம் முன்னோர்களுக்கு செய்யும் நன்றிக்கடனாகும் . முன்னோர்கள் நம்மொழிக்கென உருவாக்கித் தந்துள்ள லிபியை ஏற்றுக் கொண்டு பயன்படுத்துவதொன்றே நம்மொழிக்கும் இனத்திற்கும் பெருமை சேர்க்கும் . வேற்றாரும் நமக்கு மரியாதை செய்வர் . சொந்த லிபியை துறந்தோமானால் அதனை உருவாக்கித் தந்த முன்னோர்களையும் , அவர்கள் பட்டபாட்டையும் , முயற்சியையும் , உழைப்பையும் மறந்து அவர்களை கொச்சைப்படுத்தியவர்களாவோம், நன்றி மறந்தவராவோம் . அதனாற்றான் நம்மொழிக்கும் , இனத்திற்கும் இழிநிலைதானே வந்தடையும் . தமிழ் மட்டுமே அறிந்த பாமரர்களுக்கு நாகரியில் எழுதப்படும் ஸமஸ்க்ருதம், ஹிந்தி , மராத்தி , ஸௌராஷ்ட்ரம் ஆகிய அனைத்தும் ஹிந்திதான் . வடமொழி மற்றும் ஹிந்தி எதிர்புணர்ச்சி மிக்க தமிழ் நாட்டில் ஸௌராஷ்ட்ர மொழியை அதன் சொந்த லிபியை கொண்டு வளர்ப்பதே அறிவுடமையாகும் . நாகரி லிபியை கைக்கொண்டால் அனைத்து வகையிலும் மொழியின் வளர்ச்சி தடைபடும் . காலதேச வர்த்தமானத்தின்படி வாழ்வதே அறிவுடையோரின் முறையாகும் . ஸௌராஷ்ட்ரர்கள் தமிழ்நாட்டிலும் , வெளி மாநிலங்களிலும் அயல்நாடுகளிலும் வசித்து வருகின்றனர் . எங்கு வாழ்ந்தாலும் ஸௌராஷ்ட்ரர்களுக்கு ஸௌராஷ்ட்ரமொன்றே தாய்மொழியும் முதன்மை மொழியுமாகும் . எனவே எந்த இடத்தில் வாழ்ந்தாலும் ஸௌராஷ்ட்ரர்கள் தங்களுக்குள் கருத்துப்பரிமாற்றம் , கடிதப்போக்குவரத்து செய்யும்போது ஸௌராஷ்ட்ர மொழியில் ஸௌராஷ்ட்ர லிபியில் நடத்திக் கொள்வோமாக . காவியங்களை சொந்த லிபியில் படைப்போமாக . இயற்கை நியதியாமிது , நமது உறுதியான நோக்கம் ஆகட்டும் . ஸௌராஷ்ட்ர எழுத்தை பரப்புவோம் . ஸௌராஷ்ட்ர மொழியை வளர்ப்போம் . ஸௌராஷ்ட்ரர் அனைவரும் உயர்வோம் . உலகை வாழ்விப்போமாக .

 இக்கட்டுரைக்கான குறிப்பு நூல்கள் :

1 . மதுரை ஸௌராஷ்ட்ர ஸபையினரின் பொன்விழா ஆண்டு மலர் .

2 . ஸௌராஷ்ட்ர விப்ரபந்து ஸ்ரீ கு.வெ. பத்மநாப அய்யர் அவர்களால் 1945 - ல் பதிப்பித்து வெளியிடப்பெற்ற GLIMPSES OF THE SOURASHTRA LANGUAGE AND ITS LITERATURE ( A TRUE ABSTRACT OF THE CORRESPONDENCE BETWEEN Dr. H.N. RANDEL M.A. , D.Phil . , LIBRARIAN INDIA OFFICE , WHITE HALL LONDON AND SRI . K.V.PADMANATHA IYER )

3 . மதுரை , ஸ்ரீ ஜானகி J.S. வேங்கடராம சாஸ்திரியார் அவர்களால் தொகுக்கப்பட்டு , மதுரை பிரம்ம வித்யாஸ்ரம சபையிரால் 1915 ம் ஆண்டு வெளியிடப்பெற்ற ஸ்ரீமத் ஸௌராஷ்ட்ர சரித்ர ஸங்க்ரஹம் - நூலின் 1971 - ம் வருடத்திய இரண்டாம் பதிப்பு .

 4 . இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து நூல்கள் இவையாவன.

இக்கட்டுரையை தொகுத்து எழுதியவர் ஸ்ரீ தேவேந்திரியா D.R. ஜெயராமன், மதுரை

இக்கட்டுரை பாஷாபிமானி மாத இதழில் 2006 & 2007 ல் வெளியிடப்பட்டுள்ளது.

மின்னூல் வடிவமைப்பு

Kondaa.S.Senthilkumar Madurai

www.sourashtralibrary.blogspot.com

www. saurashtralanguage.poetry.blog


இக்கட்டுரையை மின்னூலாக பதிவிறக்கம் செய்ய

ஸௌராஷ்ட்ர எழுத்தின் சிறப்பு


Comments


ꢚꢸꢒ꣄ꢒꢸ ꢯꣂꢥ꣄ꢡꣂꢰ꣄ !

ꢮꢶꢮꢬ꣄ꢥꢸ ꢂꢮ꣄ꢬꢾ ꢣꣁꢳꣁ ꢲꢸꢞꢬꢱ꣄

ꢌꢭ꣄ꢭꢾ ꢪꢴꣁꢜ꣄ꢜ ꢫꢡ꣄ꢡꢥ꣄ !

ꢱꢸꢩ ꢥꢥ꣄ꢣꢶꢥꢶꢥ꣄ !!

"ꢥꢾꢳꢶ ꢱꣁꢒ ꢬꢴꢵꢡ꣄ꢡꢾ ꢥꢴꢥ꣄ꢥ ꢭꢴꣁꢮꣁ ꢪꢴꢳꢶ ꢩꢹꢛꢶꢬ꣄ ꢡꢶꢬꢱ꣄ꢡꢾ ꢒꢶꢱꣁ ?

ꢩꢾꢳꢶ ꢗꣁꢒ꣄ꢒꢜ꣄ ꢱꢿ !!

Popular posts from this blog

ஸௌராஷ்ட்ர ஸுளு க்ரியா வல்லரி

caturbhasha vallari (Sanskrit,Saurashtra,Telugu and Tamil Dictionary)

Vikramaditya vetala Story in Sourashtrii