Featured Post

ஸௌராஷ்ட்ர ஸுளு க்ரியா வல்லரி

ஸ்ரீரஸ்து ஸௌராஷ்ட்ர ஸுளு க்ரியா வல்லரி லிக்கெயொ என்.எ.எஸ். ரெங்க3ய்யான் பரிஷ்ருதம் டி.எஸ்.வெங்கடாசல ஸர்மொ மது4ரொ எக மோல் ஒண்டொ கலொ 1916   ஸ்ரீரஸ்து ஸௌராஷ்ட்ர ஸுளு க்ரியா வல்லரி ஸ்லோக் க்ரியாபநொ மெனத்தேடு தா4து பஸ்னு ப்ரயோகு3நு பு4ங்க்லோரூ டீப்குதாஸ்ஸாமூ லிங்கு3 கீ3ந்தெ3ஸ்வுவேலுநு உஸுகின் வெஸி ஹோஸ்ஸெத்லொ ஸுகின்ஸுன் மத்4யமாதி3னும் எஸீகின் யாஸீ கே3காலு கே3ம்விநா லிங்குபே4து3நீ: ஔதகாலுகு அந்தைகொ உகின்வெ உத்தமாகவை இநு மைதா2மு தைதா2மு நிர்லிங்கு3ம் ப3ஹுகேகவை || ஸ்ரீரஸ்து ஸௌராஷ்ட்ர ஸுளு க்ரியாவல்லரீ ஸௌராஷ்ட்ரும் தெ2வ்ட3க்ரியாநுகு தா4துக் கால பே4து3ன் விவரின் ஸங்க3த்திஸாநு கோ4ஷணொ. தா4துன் தி3ய்யொ ப்ரதா4நதா4து - பகுதி ஸஹாயதா4து - விகுதி ப்ரதா4நதா4து ஸஹாயதா4து க்ரியா பூர்த்தி ஜ ………….. வாஸு ……………….ஜவாஸு ஸி ……….. எஸி…………………….ஸியெஸி க2 ----------வாயி …………………க2வாயி க்ரியாபூர்த்தி வினைமுற்று காலுந் தீ2ந்யொ வர்தமாநகாலு - நிகழ்காலம் பூ4த காலு - இறந்தகாலம் ப4விஷ்யத்காலு - எதிற்காலம் வர்தமான காலு ஸு வெஸி ஸு ஸுன் ஸு ஸுன் ஸு ஸு பூ4தகாலு எஸி யாஸி எஸி யாஸி எஸி யாஸி இஸி யாஸி எஸி யெஸி ப4வ

ஸௌராஷ்ட்ர மொழி ஒரு பிராகிருத மொழி

 

ஸௌராஷ்ட்ர மொழி ஒரு பிராகிருத மொழி

இந்தியாவில் வழங்கப் பெறும் மொழிகள் அனைத்தும் இந்தோ - ஆரியம் , திராவிடம் , திபேத் - பர்மியம் , முண்டா ஆகிய நான்கு மொழிக் குடும்பங்களை சார்ந்தவை . இந்தியாவில் இந்தோ - ஆரிய மொழிக்குடும்ப மொழியினை பேசுவோர் - 74 %, திராவிட குடும்ப மொழி பேசுவோர் - 23 %, ஏனைய குடும்ப மொழி பேசுவோர் - 7 %, என இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு புள்ளிவிபரங்கள் கூறுகின்றன் .

வட இந்தியாவில் தற்போது வழங்கப்பெறும் காஷ்மீரி , குஜராத்தி , கொங்கணி , அஸ்ஸாமி , ஒரியா , பஞ்சாபி , பிகாரி , போஜ்புரி , மராத்தி , மார்வாரி , மேவாரி , மைதிலி ஆகிய மொழிகளும் , தென்னிந்தியாவில் வழங்கப்படும் ஸௌராஷ்ட்ர மொழியும் மேற்கு வங்க மாநிலத்திலும் , வங்க தேசத்திலும் வழங்கப்பெறும் வங்காளியும் , இந்தியாவிலும் , பாகிஸ்தானத்திலும் வழங்கப்படும் உருதுவும் , ஸிந்தியும் , இலங்கையில் வழங்கப்பெறும் . சிங்களமும் , செவ்வியல் மொழியுமான ஸம்ஸ்கிருதமும் இந்தோ ஆரிய மொழிக்குடும்ப மொழிகள் . வட இந்தியாவில், வேதகாலத்திலும் வேதகாலத்திற்குப் பிறகு கி.பி .10 - ஆம் நூற்றாண்டு வரை செவ்வியல் மொழியான ஸம்ஸ்கிருதம் , பிராம்மணர்கள் க்ஷத்தியரியர்கள் பிற கற்றவர்களாலும் பேசப்பட லாடி ஸௌரஸேநி , மாகதி , அர்த3மாகதி . வைகாசி ஆகிய ஆறு பிராகிருத ( பொதுமக்கள் ) மொழிகள் ஏனைய பொதுமக்களாலும் , அனைத்துத் தரப்பு பெண்களாலும் பேசப்பட்டதாக வரலாறு கூறுகிறது .

அப்பிராகிருத மொழிகள் மத்திய காலத்தில் அதாவது 10-ஆம் நூற்றாண்டிற்குப்பின் அபப்ரம்ச மொழிகளாக திரிந்து வழங்கின . அபப்ரம்ச மொழிகள் மேலும் திரிந்து வட இந்தியாவில் தற்காலத்தில் புதிய இந்தோ-ஆரிய மொழிகளாக திரிந்து மக்களால் பேசப்பட்டு வருகின்றன. மொழி அறிஞரான எஸ். வையாபுரிப்பிள்ளை B.sc., B.L., என்பவர் தமது சொற்கலை விருந்து என்ற நூலில் பிராகிருதத்தின் பொது இயல்புகள் பற்றி குறிப்பிடுகிறார். அவையாவன பிராகிருத மொழிகளுக்கு..

1.      எகர , ஓகர , ( குறில் உயிர்கள் உண்டு )

2.    , , விஸர்கம் - இவை இல்லை .

3.     சொல்லின் இறுதியில் மெய்யெழுத்துக்கள் பெரும்பாலும் வர மாட்டா.

4.     குறிலுக்குப் பின் இரண்டு மெய்களுக்கு மேல் வர மாட்டா.

5.     ஒரு சொல்லில் வரும் கூட்டு மெய்கள் பெரும்பாலும் ஓரினமாய் அமைந்து விடுகின்றன.  உதாரணமாக ரக்த என்பது ரத்என்றும் சப்த என்பது சத்த என்று மாறி விடும்.

6.    ஒருமை பன்மையேயன்றி இருமை(Dual) இல்லை, ஸௌராஷ்ட்ர மொழி மேதாவி தொ.மு. இராமராய், தமது ஸௌராஷ்ட்ர மொழி இலக்கண நூலில் பிராகிருத மொழிகள் ஒவ்வொன்றிற்க்கும் எழுத்துக்கள் 40 என தெரிவிக்கிறார். அவை உயிர் எழுத்துக்கள் அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஒ ஓ - எனும் 10, மெய்கள் க க2 34, 22, ட ட2 3 4, த த2 3 4 , ப ப2 3 4 , ய ர ல வ ஸ ஹ ள என்ற 30 ஆக மொத்தம் 40.

 

திரு எஸ் .வையாபுரிப் பிள்ளை சுட்டியுள்ள எண்களில் ஒருமை பன்மை யேயன்றி இருமை இல்லை எனும் ஒரு பொது இயல்பை மட்டும் தக்க வைத்துக் கொண்டு தற்போது வட இந்தியாவில் வழங்கப் பெற்றும் புதிய இந்தோ ஆரிய மொழிகள் அனைத்தும், ஸம்ஸ்க்ருதத்தின், தன்மையை பின் பற்றி ஏனைய பிற இயல்புகளை இழந்து விட்டன.

 

1.      ஸௌராஷ்ட்ர மொழியில் எ , ஒ என்னும் குறிகள் உண்டு .

2.    , ஷ விஸர்க்கம் - இவை இல்லை .தற்கால தென்னிந்திய ஸௌராஷ்ட்ர மொழியில் ஶ் , ஷ மற்றும் விஸர்கம் ஆகியவை ஸம்ஸ்க்ருத தத்பவ சொற்களை எடுத்தாள பயன்படுகின்றன.

 

இவையன்றி , ஸ் மற்றும் ஷ் மெய்யொலிகளாக பயன்படுவதில்லை. அத்துடன் க2  4 2 2 2 4242  4  24 ஹ ம: ந: ர: ல ஆகிய வல்லுயிர்ப் பொலிகள் ஸௌராஷ்ட்ரத்தில் மெய்யொலிகளாக பயன்படுத்தப் படுவதில்லை .மேலும் உயிர் எழுத்துக்களில் அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஓ ஆகிய 10 பெரும்பான்மையாக பயன்படுகின்றன. ஐ ஔ , ஆகிய 2 அரிதாக பயன்படுகின்றன ர்ரு ர்ரூ , க்லூ அம் அ: ஸம்ஸ்க்ருத சொற்களை தத்பவமாக எடுத்தாள பயன்படுகின்றன் .

 

3 .சொல்லின் இறுதியில்ல மெய்யெழுத்துக்கள் பெரும்பாலும் வரமாட்டாது. ஸௌராஷ்ட்ர (பிராக்ருத) மொழியில் எழுவாய் சொற்கள் (முதலாம் வேற்றுமை சொற்கள்) உயிர் எழுத்துடனோ, ,ம,ல என்ற மெய்யொலிகளுடனோ முடியும் .

 

இராமராய் அவர்களின் இலக்கண நூல் மேலும் வல்லுயிர்பு ஒலிகள் சொற்களின் முதல் எழுத்தாக மட்டுமே அமையும் . ( எ - டு )

ஸம்ஸ்க்ருதம்

ஸௌராஷ்ட்ரம்

தமிழ்

 

ரத2:

ரெத்து

தேர்

பஹி:

4ராட்

வெளியே

3தி4:

தெ4ஞி

தயிர்

 

குறிலுக்குப் பின் இரண்டு மெய்களுக்கு மேல் வர மாட்டா .

 

 இவ்வியல்புகள் ஸௌராஷ்ட்ர பிராகிருத மொழிக்குப் பொருந்தும். மேலும் அவ்வாறு வரும் இரு மெய்களும் இன எழுத்துக்களாக அமையும். ( எ - டு )

 

ஸௌராஷ்ட்ரம்  

தமிழ்

வங்க்3டொ

கோட்டம்/வளைவு

வங்க்3ளொ

வில்

பொ4ங்க்3ரொ

பம்பரம்

தெந்த்3லொ

முறுக்கு

தந்தி3லி

விளக்குத்தண்டு

கந்த்3லொ

கொழுக்கட்டை

அம்ப்3லொ

கணவர்

அம்ப்3ளொ

நெல்லிக்கனி

இம்ப்3ளொ

கொய்யாபழம்

உம்ப்3ளொ

அத்திப்பழம்

ஸிங்க்3டொ

கால்நடைகளின் கொம்பு

ஒரு சொல்லில் வரும் கூட்டு மெய்கள் பெரும்பாலும் ஓரினமாய் அமைந்து விடுகின்றன.

 

இவ்வியல்பும் ஸௌராஷ்ட்ர ( பிராகிருத ) மொழிக்கு பொருந்தும் ( எ - டு )

 

ஸம்ஸ்க்ருதம்

ஸௌராஷ்ட்ரம்

தமிழ்

ரக்த

ரெகது

குருதி

ஸத்ய

ஸெத்து

வாய்மை

ஸப்33

ஸெத்3து3

ஒலி / இரைச்சல்

 

மேலும் ஸம்ஸ்க்ருதத்தில் தொடர்ந்து வரும் இரண்டு இனமெய்களில் , இரண்டாவது மெய் ஸௌராஷ்ட்ரத்தில் உயிர் மெய்யாக திரியும். கூட்டு மெய்யும் அவ்வாறே திரியும் . ( எ - டு )

ஸம்ஸ்க்ருதம்

ஸௌராஷ்ட்ரம்

தமிழ்

மந்த்ர

மொந்துர்

மந்திரம்

தந்த்ர

தந்துர்

தந்திரம்

யந்த்ர

யந்துர்/எந்துர்

யந்திரம்

4ர்ம

தெ4ரும்

அறம்

கர்ம

கெரும்

வினை

 

ஒருமை பன்மையேயன்றி இருமை இல்லை . ஸம்ஸ்க்ருதத்தில் மட்டுமே ஒருமை - இருமை - பன்மை உண்டு.

ஸௌரஸேநி எனப்படும் தற்போதைய ஸௌராஷ்ட்ர பிராகிருதத்திலும் , தற்போதைய வட இந்திய மொழிகளிலும் ஒருமை - பன்மை மட்டுமே உள்ளன. மேலும் தற்கால வட இந்திய மொழிகளில் ( புதிய இந்தோ - ஆரியன் மொழிகள் ) பால் அதாவது ஆண் , பெண் அவையல்லாதன என ஸம்ஸ்க்ருத  லக்கணத்தை ஒட்டி பொருளை கருத்திற்கொள்ளாது,  சொல்லீற்று  எழுத்துக்களை கொண்டே பகுக்கப் பெறுகின்றன .

 

ஸௌராஷ்ட்ர (பிராக்ருத) மொழியில் உணர்வு மற்றும் அறிவு கூடிய நகரும் தன்மை கொண்டவை மஹத் ஸப்3து3 ( உயர்திணை ) எனவும் , நகராத்தன்மை உள்ளனவும் , ஜடப்பொருள்களும் அமஹத் ஸப்3து3  ( அஃறிணை ) எனவும் பகுக்கப் பெறுகின்றன . உயர்திணை மட்டும் ஆண்பால் மற்றும் பெண்பால் என பகுக்கப் பெறுகின்றன.

 

 பிராகிருதத்தின் பொது இயல்புகளை ஒப்பிட்டு காண்கையில், தென்னிந்தியாவில் வழங்கப்பெறும் ஸௌராஷ்ட்ர மொழி பிராகிருத மொழி என்பது துணிபு.

 

இக்கட்டுரை பா4ஷாபி4மானி மாத இதழில் 2012 ஆம் ஆண்டு நவம்பர்-டிசம்பர் இதழில் தேவேந்திரியா ஸ்ரீ D.R.ஜெயராமன் மதுரை அவர்கள் எழுதியது.




Comments


ꢂꢱ꣄ꢒꢶꢡꢾꢥꢸ ꢒꢳꢳ꣄ꢳꢸꢥꣁ ꢲꣁꢬꢶꢫ ꢮꢶꢮꢬ꣄, ꢚꢸꢒ꣄ꢒꢸ ꢤꢥ꣄ꢥꢸ, ꢨꢵꢨꢸ !!

ꢂꢱ꣄ꢒꢶꢡꢾꢥꢸ ꢒꢳꢳ꣄ꢳꢸꢥꣁ ꢲꣁꢬꢶꢫ ꢮꢶꢮꢬ꣄, ꢚꢸꢒ꣄ꢒꢸ ꢤꢥ꣄ꢥꢸ, ꢨꢵꢨꢸ !!

Popular posts from this blog

64 Sourashtra Gothram & Family Names

ஸௌராஷ்ட்ர ஸுளு க்ரியா வல்லரி