Featured Post

ஸௌராஷ்ட்ர ஸுளு க்ரியா வல்லரி

ஸ்ரீரஸ்து ஸௌராஷ்ட்ர ஸுளு க்ரியா வல்லரி லிக்கெயொ என்.எ.எஸ். ரெங்க3ய்யான் பரிஷ்ருதம் டி.எஸ்.வெங்கடாசல ஸர்மொ மது4ரொ எக மோல் ஒண்டொ கலொ 1916   ஸ்ரீரஸ்து ஸௌராஷ்ட்ர ஸுளு க்ரியா வல்லரி ஸ்லோக் க்ரியாபநொ மெனத்தேடு தா4து பஸ்னு ப்ரயோகு3நு பு4ங்க்லோரூ டீப்குதாஸ்ஸாமூ லிங்கு3 கீ3ந்தெ3ஸ்வுவேலுநு உஸுகின் வெஸி ஹோஸ்ஸெத்லொ ஸுகின்ஸுன் மத்4யமாதி3னும் எஸீகின் யாஸீ கே3காலு கே3ம்விநா லிங்குபே4து3நீ: ஔதகாலுகு அந்தைகொ உகின்வெ உத்தமாகவை இநு மைதா2மு தைதா2மு நிர்லிங்கு3ம் ப3ஹுகேகவை || ஸ்ரீரஸ்து ஸௌராஷ்ட்ர ஸுளு க்ரியாவல்லரீ ஸௌராஷ்ட்ரும் தெ2வ்ட3க்ரியாநுகு தா4துக் கால பே4து3ன் விவரின் ஸங்க3த்திஸாநு கோ4ஷணொ. தா4துன் தி3ய்யொ ப்ரதா4நதா4து - பகுதி ஸஹாயதா4து - விகுதி ப்ரதா4நதா4து ஸஹாயதா4து க்ரியா பூர்த்தி ஜ ………….. வாஸு ……………….ஜவாஸு ஸி ……….. எஸி…………………….ஸியெஸி க2 ----------வாயி …………………க2வாயி க்ரியாபூர்த்தி வினைமுற்று காலுந் தீ2ந்யொ வர்தமாநகாலு - நிகழ்காலம் பூ4த காலு - இறந்தகாலம் ப4விஷ்யத்காலு - எதிற்காலம் வர்தமான காலு ஸு வெஸி ஸு ஸுன் ஸு ஸுன் ஸு ஸு பூ4தகாலு எஸி யாஸி எஸி யாஸி எஸி யாஸி இஸி யாஸி எஸி யெஸி ப4வ

An Indo Aryan Language of South India


ஸௌராஷ்ட்ர பாஷா
ꢱꣃꢬꢵꢰ꣄ꢜ꣄ꢬ ꢩꢵꢰꣁ
ஓர் தென்னிந்திய இந்தோ ஆரியன் மொழி - H.N.ராண்ட்ல்

கி .பி .1880 - ம் ஆண்டு முதல் 40 க்கு மேற்பட்ட வெளியீடுகள் சென்னையில் ' ஸௌராஷ்ட்ர மொழி ' யென பதிவு செய்யப்பெற்றுள்ளன .லிங்குவிஸ்டிக் சர்வே ஆப் இந்தியா வால்யூம் 9 ( 2 ) - 447 - 448 பக்கங்களில் இந்தமொழி " பட்னூலி '' யெனக் குறிக்கப்பட்டுள்ளது . ஆனால் விவரிக்கப் படவில்லை . தமிழ் மாவட்டங்களில் குறிப்பாக மதுரையிலும் மற்ற நகரங்களிலும் வசிக்கும் - தமிழக ஜவுளித் தொழிலில் பெரும் பங்கேற்றுள்ள நூறாயிரம் ( 100 , 000 ) மக்களுக்கு மேற்பட்டவர்களால் இம்மொழி பேசப்படுகிறது .மிகப் பெரும்பான்மையானவர்கள் ( 104000ல் 89000 பேர் ) தமிழை இரண்டாம் மொழி ( மாற்றுமொழி ) யாகப் பேசுகின்றனர் . " காஸ்ட்ஸ் அண்ட் ட்ரைப்ஸ் ஆப் ஸௌத் இந்தியா " வால்யூம் 6ல் ( 1909 ) . தர்ஸ்டன் அவர்கள் பட்நூல்காரர்கள் ' என்னும் தலைப்பில் இவர்களைப் பற்றி குறிப்பு கொடுக்கிறார் . இவர்களுடைய மரபுப்படி இவர்களின் பூர்வீக வாசஸ் தலம் ஸௌராஷ்ட்ரம் ' என்பது மட்டும் இப்பொழுது குறிப்பில் கொண்டால் போதுமானது. மாண்டசார் கல்வெட்டுகளின்படி கி.பி. 437 - 438ல் , லாடதேசத்திலிருந்து மாண்டசாருக்கு குடிபெயர்ந்த பட்டு நெசவாளர்களில் ஒரு பகுதியினர் அங்கு சூரியனுக்கு ஓர் கோவில் கட்டினதாகத் தெரிகிறது . அக்கோவிலை அவர்கள் அக்கல்வெட்டு ஏற்பட்ட காலமான கி.பி. 473 - 474ல் பழுது பார்த்தனர். அவர்கள் தென்னிந்தியாவின் தற்பொழுதைய ஸெளராஷ்ட்ரர்களின் முன்னோர்கள் என்பது வரலாறு. அவர்கள் கல்வியிலும், போர்க்கலையிலும்,தொழில்துறையிலும் திறமைவாய்ந்தவர்களாய், எல்லாத்துறையினரும் கூடிய இனமென அக்கல் வெட்டு கூறுகிறது. சிறந்த கவியான ' வத்ஸபட்டி ' யும் இவ்வினத்தைச் சேர்ந்தவர் . இவர் கல்வெட்டுகளில் கவிதை செய்தவர். இவர்கள் சிறிது காலம் மாண்டசாரில் வசித்தார்கள் எனத் தெரிகிறது. ஆனால் பதினான்காம் நூற்றாண்டின் முற்பகுதியில் முஸ்லீம்களால் அது கைப்பற்றப்படுவதற்கு வெகு காலத்திற்கு முன்பே மரபுப்படி தற்கால ஸௌராஷ்ட்ரர்கள் யாதவர்களின் தலை நகரமான தேவகிரிக்கு இடம் பெயர்ந்து விட்டனர். அடுத்து முதலில் விஜய நகரத்திற்கும் கடைசியாக தற்போது அவர்களின் வாசஸ்தலமான தமிழகத்திற்கும் அவர்கள் இடம் பெயர்ந்து வந்தனர். இவ்விதம் குடி பெயர்ந்த வரலாற்றை சில குறிப்பிட்ட வார்த்தைகளினால் அவர்களின் திருமணச் சடங்குகளில் சொல்லப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. அவர்கள் தெலுங்குமொழியின் ஆதிக்கத்திற்கு உட்பட்டிருந்தனர் என்பது அவர்களின் சில இலக்கிய வெளியீடுகளில் காணப்படும் தெலுங்குச் சாயையிலிருந்து வெள்ளிடையாகத் தெரிகிறது .அவர்கள் ஸௌராஷ்ட்ர தேசத்திலிருந்தும் , லாட தேசத்திலிருந்தும் கொண்டுவந்த மொழியானது முதலில் மிகநெடுங்காலத்திற்கு ராஜஸ்தான மொழி வழக்குக்கும் , பின் மராத்தி , தெலுங்கு மற்றும் தமிழ் மொழி வழக்குகளுக்கும் ஆதிக்கங்களுக்கும் உட்பட்டிருக்கிறது .மதுரை - சென்னை ஸௌராஷ்ட்ர இலக்கிய கழகம் சென்ற 40 வருடங்களுக்குள் எது இம்மொழிக்கு பொருத்தமான லிபி எனும் பிரச்னையை எழுப்பியுள்ளது .இந்தோ ஆரியன்மொழிகளுக்குத் தேவையான ஒலி வேறுபாடுகளைக் குறிக்கும் அடையாளங்களுடன் தமிழ் எழுத்துக்கள் சாதாரணமாக உபயோகிக்கப்படுகின்றன .ஆனால் ஸௌராஷ்ட இலக்கியத்தின் மணியாக தலைசிறந்து விளங்கும் வெங்கடஸுரியின் ஸங்கீத இராமாயணம் உள்ளிட்ட மூன்று அல்லது நான்கு வெளியீடுகள் தெலுங்கு எழுத்துக்களில் அச்சடிக்கப்பட்டுள்ளன. சமீபத்தில் ' , ' முதலிய குறில் எழுத்துக்களுக்கு சிறப்பு அடையாளங்களுடன் கு.வெ. பத்மநாபய்யரின் பிரசுரங்கள் நாகரி அச்சடிக்கப் பட்டுள்ளன. கி.பி. 1880லும் , 1899 முதல் . வரையிலும் பல புத்தகங்கள் கல் அச்சுகளிலும் அச்சு எழுத்துக்களிலும் தனித்தன்மையுள்ள ஸௌராஷ்ட்ர எழுத்துக்களில் வெளியிடப்பட்டுள்ளன. இந்த ஸௌராஷ்ட்ர எழுத்தில் அச்சடிக்கப்பட்டதுதான் ஒரே இலக்கண நூலான ( தொப்பே . M . இராமராயி ) T . M . இராமாராவ் அவர்களின் '' ஸௌராஷ்ட்ர வ்யாகரணு பைல ஸல்லாபுஸர '' எனும் இலக்கண நூல் . ராமாராவ் ஏற்கனவே 1901ல் ஸௌராஷ்ட்ர நீதி ஸம்புவும் , பின் இவ்விலக்கணமும் , தொடர்ந்து 1906ல் ஸௌராஷ்ட்ர போதினியும் 1908ல் சிறிய நந்தி நிகண்டு - வும் ஸௌராஷ்ட்ர எழுத்துக்களில் அச்சிட்டு வெளியிட்டுள்ளார் . எனக்குத் தெரிந்தவரையில் " புராதன ஸௌராஷ்ட்ர லிபி '' சமீபத்தில் ஒரியா , தெலுங்குமொழி எழுத்துக்களுடன் ஒப்பிட்டு வெளியிடப்பட்ட ஓர் அட்டவணையில் தவிர்த்து இந்த எழுத்து வேறு எங்கும் அச்சில் தோன்றவில்லை. அநேகமாக இந்த எழுத்தைத்தான் தர்ஸ்டன் அவர்களுக்கு N . சுப்பிரமணிய அய்யர் எழுதிய ஓர் கடிதத்தில் '' சமீபத்தில் ஒரு ஸௌராஷ்ட்ர எழுத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது '' எனக் குறிப்பிட்டுள்ளார் , ( ஆனால் கி . பி . 1880 லேயே இந்த எழுத்து இருந்திருக்கிறது ! ) திரு R . N . குப்புசாமி , 1930 ம் ஆண்டில் நாகரி எழுத்தில் அச்சான ராமராயின் ஸௌராஷ்ட்ர நீதி ஸம்பு " புத்தகத்தில் இந்த நீதிஸம்பு மூலஸ்லோகங்கள் ஆசிரியர் பிரம்மஸ்ரீ தொ . மு . ராமஸ்வாமி அவர்களால் எழுதப்பட்டன . அவர் தான் உண்டாக்கிய எழுத்துக்களில் எழுதி இருந்ததைத்தான் கா1 எழுத்தில் தற்பொழுது அச்சடிக்கப்பட்டது என ( இந்த ஆசிரியரின் முடிவுக்கு மாறாக ) குறிப்பிட்டுள்ளார் . இந்த ஸௌராஷ்ட்ர எழுத்துக்கள் தனித்த எழுத்துக்களும் ' கூட்டெழுத்துக்களும் , சுருக்கெழுத்துக்களும் ஆகயிருப்பதினால்  கஷ்டமாயுள்ளது . இருந்தாலும் சாதாரண தனித்த எழுத்துக்களையே சுருக்கெழுத்துக்கள் ( இல்லாமல் ) தவிர்த்து உபயோகிக்கலாம் . அதிர்ஷ்டவசமாக போதினி”' யில் முழுமையாக இவ்வெழுத்துக்களும் சுருக்கெழுத்துக்களும் தரப்பட்டுள்ளதினால் " இலக்கணம் " படிக்கமுடிந்தது . மேலும் எனக்கு இந்த மொழியைப்பற்றி வேறெதுவும் தெரியாததினால் இந்த இலக்கணம் படிக்க நேர்ந்தது . 48 பக்கங்களே கொண்ட சிறிய புத்தகம் - அதிலும் முதல் 18 பக்கங்கள் ப்ரத்திஹார சூத்திரங்களையும் , பாணினியின் மொழியியலையும் எழுத்துக் களையும் விவரிக்கின்றன . இது மூலத்தின் மிக நேர்த்தியான சுருக்கமாக உள்ளதால் மூலத்தைப் படிக்க வேண்டிய கட்டாயத்தினின்று தப்பவைப்பதுடன் மூலத்தைப் பார்த்தால் படிக்காமலேயே போகும் ஏதுவிலிருந்தும் விடுவிக்கிறது . ஆதலால் ராமாராவின் மாணவரான திரு கு . வெ . பத்மநாபய்யர் தற்பொழுது இதை நாகரியில் எழுத்துப்பெயர்ச்சி செய்வது அதிர்ஷ்ட வசமானதாகும் . ஸௌராஷ்ட்ர மொழி வெளியீடுகள் பாடபுத்தகங் களாக மட்டுமில்லை ' . இந்த 40 வருடங்கள் அச்சு இலக்க கியத்தின் ஆரம்பத்தைத்தான் கண்டிருக்கின்றன . 1905ல பாரதம் , பாகவதம் போன்று பல புத்தகங்கள் அச்சிட்டு வெளியிட சேகரிக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது . இம் மொழியின் இலக்கியம் வளர வளர ஸௌராஷ்ட்ர மொழியில் இலக்கிய தரத்தன்மை இத்தகையது என்று நன்கு புலப்படுமென எதிர்பார்க்கலாம் . 1905ல் தெலுங்கு எழுத்துக்களில் அச்சாகியுள்ள மிகப்பெரிய நூலான வெங்கடஸூரியவர்களின் ஸங்கீத ராமாயணம் ஏற்கனவே சிறந்த இலக்கியமெனக் கொண்டாடப்படுகிறது . அவர் தன் வாழ்நாளில் முற்பகுதியில் தமிழ் , தெலுங்கு மொழிகளைக் கசடறக் கற்பதில் ஈடுபட்டிருந்தாலும், தன்னுடைய ஸௌராஷ்ட்ர மொழிப் படைப்புக்களில் திராவிட குடும்பமொழி வார்த்தைகளைத் தவிர்த்து தூய ஸௌராஷ்ட்ர மொழியில் எழுதுவதை லக்ஷியமாகக் கொண்டார். ஆனால் நடனகோபால நாயகியின் வரலாற்று வசன நூல் ஒன்றில் இம்மாதிரியான திராவிடக் குடும்பமொழிகளின் ஆதிக்கம் தெள்ளெனத் தெரிகிறது . நடனகோபால நாயகி அவர்களின் பாடல்கள் பல தொகுதிகளாக வெளியிடப்பட்டிருக்கிறது . தவிர சமீபத்தில் 1938ல் கும்பகோணத்திலிருந்து உச்சரிப்பு போதக்குறிகளுடன் தமிழ் எழுத்தில் எதிரெதிரில் சமஸ்கிருத மூலமும் ஸௌராஷ்ட்ர மொழி மூல முமாய் ராகதாளங்களுடன் குருகதி . ரெங்கதாமய்யர் அவர்களால் இயற்றப்பட்ட மிக முக்கிய வெளியீடான கீத கோவிந்தத்தில் தெலுங்கு ஆதிக்கம் அதிகமிருப்பது காணப்படுகிறது . 1852 முதல் 1913 வரை ஜீவித்திருந்த ராமராவ் பல புத்தகங்களை எழுதியுள்ளார் . அநேகமாய் அவை அச்சில் வெளிவராததாகத் தெரிகிறது . அவருடைய ஸௌராஷ்ட்ர நீதிஸம்புவில் சுத்தமான இந்தோ ஆரியன் சொற்களே உபயோகப்படுத்தப் பட்டுள்ளன . இந்த ஒரு காரணத்தினால் மட்டுமின்றி அது மிகவும் குறிப்பிடத்தக்க ஒரு இலக்கியமாகும் .

 குறிப்பு : " An Indo Aryan Language of South India : Sourashtra - Bhasha ' ' 
எனும் H . N . ராண்டேல் அவர்களின் கட்டுரையில் ஓர் பகுதி - மொழிபெயர்ப்பு ராம்

1976 ஆம் ஆண்டு பாஷாபிமானி மாத பத்ரிக்கையில் திவளி பூ2லில் வெளியானது.
வலைப்பதிவு : கொண்டா K.S.செந்தில்குமார் மதுரை


Comments

pathykv said…
Very useful history of Sourashtra language.
pathykv said…
Very useful history of Sourashtra language.
Ji...
i do read all books published from our beloved ancestral forefathers from Madurai since from my teen age, not only that i am a debated person in a conversation group with the Japanese linguistic historian researche during 1980 s..my voice merly two hours recorded by him for his research theory submission...during 2014-15 iwas in contact with him in email chat like so with you now itself.Alright iand the great Japan scholer sailing in the same boat..means we saurashtri definitely Eurasian clans but blended with linguism only.palkar is the exact identification in our mother tongue since we the sun worshippers inhabited in Latha region of sorashtram ...which means Latha is a word for sun itself as the sun has more than 108 names in so many languages...Euro clan slovic people called as soura since we worship soura..Pattunuli is actually a corruptive word which doesn't have any authoritative linguistic identification. We the palkar .the sun worshippers from Latha region of greater sourashtram is inevitable.thanks for giving me a chance to interact..thanyavho

Popular posts from this blog

ஸௌராஷ்ட்ர ஸுளு க்ரியா வல்லரி

caturbhasha vallari (Sanskrit,Saurashtra,Telugu and Tamil Dictionary)

Vikramaditya vetala Story in Sourashtrii