திப்புசுல்தானும் ஸௌராஷ்ட்ரர்களும்
திப்புசுல்தானும் ஸௌராஷ்ட்ரர்களும்
ஒரு சமயம் தர்மபிரபு திப்புசுல்தான் தஞ்சையில் மராட்டிய மன்னன் அரண்மனையில் பரவசமூட்டும் வேலைப்பாடுகள் அமைந்த பட்டு ஆடைகளைக் கண்டு இவற்றை தயாரித்து அளிப்பவர்கள் யார் என்று தர்மபிரபு திப்புசுல்தான் வினவ, தஞ்சை மராட்டிய மன்னர் இங்கு வசிக்கும் ஸௌராஷ்ட்ரர்களே இதை தயாரித்தனர் என்று கூற, அப்படியா என்று ஆச்சர்யத்துடன் பார்த்த திப்பு, தஞ்சை மன்னரிடம் எங்கள் அரண் மனையிலும் இது போன்ற பரவசமூட்டும் வேலைப்பாடுகள் கொண்ட பட்டு ஆடைகளை உபயோகிக்க விரும்புகிறோம், தங்கள் நாட்டில் வசிக்கும் ஸௌராஷ்ட்ரர்களின் வரவை நாங்கள் விரும்புகிறோம் & எதிர்பார்கிறோம் என்று தஞ்சை மன்னரிடம் திப்பு கூறினார், அதை அப்படியே தஞ்சையில் வசிக்கும் ஸௌராஷ்ட்ரர்களிடம் தஞ்சை மன்னர் கூறினார் அதை பணிவுடன் ஏற்று தஞ்சையில் வசிக்கும் ஸௌராஷ்ட்ர குடும்பங்கள் சில தர்மபிரபு திப்புசுல்தான் அரண்மனைக்குச்(மைசூர்) சென்றனர் அங்கு அவர்களை ஸகல வித மரியாதைகளுடன் தர்மபிரபு திப்புசுல்தான் வரவேற்றார்.
ஸௌராஷ்ட்ர மக்களும் தர்மபிரபு திப்புசுல்தான் அரண்மனையை ஸௌராஷ்ட்ரர்கள் ஒப்பற்ற கலையுணர்வுடன் கூடிய பட்டாடைகளையும், ரத்தினக் கம்பளங்களையும் தயாரித்து திப்புவின் அரண்மனையை அலங்கரித்தனர். இதைக்கண்ட திப்புவும் அகம் மகிழ்ந்து பட்டாடைகளையும், ரத்தினக் கம்பளங்களையும் தயாரித்த ஸௌராஷ்ட்ரர்களின் திறமையை ஊக்குவிக்கும்வண்ணம் பொன்னும் பொருளும் கொடுத்து கௌரவித்தார் திப்புசுல்தான்.
ஒருநாள் திப்புசுல்தான் அரண்மனையில் நடந்த விழாவில் ஸௌராஷ்ட்ரர்களை நோக்கி உங்களுக்கு என்ன வெகுமதி வேண்டும் என்று அரசர் கேட்க, ஸௌராஷ்ட்ர கலைஞர்கள் அரசரின் பெயர் என்றும் நிலைத்திருக்கும் வண்ணம் பொருள்களும், குடியிருக்க நல்ல வீடும் வேண்டும் என்று ஸௌராஷ்ட்ரர்கள் கேட்க தர்மபிரபு திப்புவும் அவ்வண்ணமே அரண்மனைக்காகத் தயாராகிக்கொண்டிருந்த சித்திர வேலைப்பாடுகள் மிகுந்த மரத்தூண்களையும் வீடு கட்டுவதற்க்குதேவையான கட்டுமான பொருள்களையும் வழங்கி ஸௌராஷ்ட்ரர்களுக்கு வீடு கட்டித்தர ஆணையிட்டார்.
திப்பு வழங்கிய மரத்தூண்கள் இன்றும் பெங்களூரில் ஸௌராஷ்ட்ர பேட்டையில் வசிக்கும் முத்தான் என்ற வீட்டுபெயருடைய முத்தான் கிருஷ்ணய்யா அவர்களின் இல்லத்தில் காணலாம். இவர்களின் மூதாதையரே தர்மபிரபு திப்புசுல்தானின் அன்பிற்க்கும் பாசத்திற்க்கும் பாத்திரமானவர்கள். இதே போன்ற தூண்களை பெங்களூர் மற்றும் ஸ்ரீரங்கப் பட்டணத்தில் உள்ள திப்பு சுல்தான் அரண்மனைகளில் காணலாம்.
Thanks : Shri. O.S.Subramanian
Comments