Featured Post

ஸௌராஷ்ட்ர ஸுளு க்ரியா வல்லரி

ஸ்ரீரஸ்து ஸௌராஷ்ட்ர ஸுளு க்ரியா வல்லரி லிக்கெயொ என்.எ.எஸ். ரெங்க3ய்யான் பரிஷ்ருதம் டி.எஸ்.வெங்கடாசல ஸர்மொ மது4ரொ எக மோல் ஒண்டொ கலொ 1916   ஸ்ரீரஸ்து ஸௌராஷ்ட்ர ஸுளு க்ரியா வல்லரி ஸ்லோக் க்ரியாபநொ மெனத்தேடு தா4து பஸ்னு ப்ரயோகு3நு பு4ங்க்லோரூ டீப்குதாஸ்ஸாமூ லிங்கு3 கீ3ந்தெ3ஸ்வுவேலுநு உஸுகின் வெஸி ஹோஸ்ஸெத்லொ ஸுகின்ஸுன் மத்4யமாதி3னும் எஸீகின் யாஸீ கே3காலு கே3ம்விநா லிங்குபே4து3நீ: ஔதகாலுகு அந்தைகொ உகின்வெ உத்தமாகவை இநு மைதா2மு தைதா2மு நிர்லிங்கு3ம் ப3ஹுகேகவை || ஸ்ரீரஸ்து ஸௌராஷ்ட்ர ஸுளு க்ரியாவல்லரீ ஸௌராஷ்ட்ரும் தெ2வ்ட3க்ரியாநுகு தா4துக் கால பே4து3ன் விவரின் ஸங்க3த்திஸாநு கோ4ஷணொ. தா4துன் தி3ய்யொ ப்ரதா4நதா4து - பகுதி ஸஹாயதா4து - விகுதி ப்ரதா4நதா4து ஸஹாயதா4து க்ரியா பூர்த்தி ஜ ………….. வாஸு ……………….ஜவாஸு ஸி ……….. எஸி…………………….ஸியெஸி க2 ----------வாயி …………………க2வாயி க்ரியாபூர்த்தி வினைமுற்று காலுந் தீ2ந்யொ வர்தமாநகாலு - நிகழ்காலம் பூ4த காலு - இறந்தகாலம் ப4விஷ்யத்காலு - எதிற்காலம் வர்தமான காலு ஸு வெஸி ஸு ஸுன் ஸு ஸுன் ஸு ஸு பூ4தகாலு எஸி யாஸி எஸி யாஸி எஸி யாஸி இஸி யாஸி எஸி யெஸி ப4வ

தாய்மொழியல்ல, என் தாலாட்டு மொழி


தாய்மொழியல்ல, என் தாலாட்டு மொழி

ஸௌராஷ்ட்ர மொழி சந்தித்து வந்த பேரிடர்களைத் தாண்டி இன்னும் மூச்சு விடுகிறது என்றால் அம்மொழியை இல்லந்தோறும் இயங்கும் உயிர் மூச்சாக ஸௌராஷ்ட்ர சமூகத்தினர் தங்களுக்குள்ளே வளர்த்து வந்ததுதான் . வெளியே பயன்படுத்த இயலாத , இனி உள்ளே இருந்தும் தூக்கி எறிய முயலாத தன்மையில் வளர்ந்ததே ஸௌராஷ்டிரம் . இது தாய்மொழி மட்டுமல்ல , தாலாட்டுமொழியும்கூட . இது சந்தித்த இடற்பாடுகளில் முதன்மையானது தெலுங்கோடு நடத்திய போராட்டம் , இரண்டாவது ஹிந்தியோடு நடத்திய போராட்டம் . மூன்றாவது தமிழோடு நடத்தி வரும் போராட்டம் . ஆட்சியாளரின் மொழிக்கு அடிமையாகிப் போவது அரச அடிமைகளின் அடிப்படை உரிமை என்றிருந்த போது , அதனை மீறி தங்கள் தாய்மொழியே தங்களின் பயன்பாட்டு மொழி என தெலுங்கிலே ஆவணப் பதிவு செய்யப்பட்ட ஆணவ காலத்தில் கூட ஸௌராஷ்ட்ரர் தங்கள் பிழைப்பிற்காக தங்கள் தாய்மொழியை இழந்திடவில்லை . ஏனெனில் அது அவர்களின் உதிரத்தோடு . உயிரோடு கலந்து வளர்ந்த மொழி . ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்ற போது , ஹிந்தி ஆதிக்கத்திற்கு விலையாகிப் போன தலைவர்களைக் கூட தடுத்து நிறுத்திய பேராற்றல் ஸௌராஷ்ட்ர மொழிக்கு உண்டு . விபரம் தெரிந்தவர்களெல்லாம் கட்சி விசுவாசத்தால் , தாய்மொழியைக் கைவிட நினைத்த சோகம் வரலாற்றில் இன்றும் கல்லறையாக இருக்கின்றது . இது களைந்தெறியப் படவில்லை . தாய்மொழியில் பயிலுவதோ , தன்னை ஸௌராஷ்ட்ரன் என்று சொல்லிக் கொள்வதோ , தலைவனின் தகுதிக்குக் குறைவு என வயிறு வளர்க்கும் பூசாரிகளான அரசியல்வாதிகள் ஹிந்திக்குக் காவடி எடுத்த காலம் அது . ஆனால் ஸௌராஷ்ட்ரம் வீட்டிற்குள் இருந்தால் கூட அது ஆலமரமாக வளர்ந்தது . அவர்களைக் காப்பாற்றிய விடுதலை வரலாற்றைக் கதை கதையாய் வருணித்த போது அதை ஹிந்தியில் எழுதாமல் வீடுகளுக்குள்ளே ஸௌராஷ்ட்டிரத்தில் பேசி மகிழ்ந்தனர் . எழுத்தில்லா மொழியெல்லாம் இலக்கியம் படைக்கலாமா என்று எண்ணி நகையாடிய காலம் அது . சௌராஷ்ட்ர மொழிக்கு எழுத்தே இல்லை என எதிரிகள் இறுமாந்திருந்த காலம் . ஒளியை மறைக்க முயன்ற இருள் போல் ஏளனங்கள் இன்று மறைந்து விட்டன . கணினியிலே கம்போஸ் செய்யுமளவிற்கு சௌராஷ்டிர மொழி எழுத்துக்களை உருவாக்கிட நம் இளைஞர்களும் இளைஞிகளும் முன் வந்துள்ளனர் . பக்தி பாடல்களெல்லாம் தெலுங்கில் இருக்கின்றன என்பதால் மற்ற மொழிகளுக்குப் பக்தி இல்லை என்பது பொருளாகாது என நிரூபிக்கும் வகையில் எழுந்து பரந்தது பக்தி மார்க்கம் . ஸௌராஷ்டிரர் தங்கள் சமயத்தையும் சாயம் பூசாமல் பாதுகாத்துக் கொண்டனர் . மதுரையில் வைதீக அரவணப்பில் அழிந்து போன வரலாறு அவர்களுக்கு தெரிந்திருந்ததால் தங்கள் கடவுளின் விடுதலைச் செயல்பாட்டிற்கான சான்றை விளக்கும் வகையில் , தங்களில் இறையியல் நம்பிக்கைகளைத் தங்கள் தாய் மொழியிலே பாதுகாத்தனர் . இது தான் இன்றைய வெற்றி , இது வெறி அல்ல , வேட்கை . இது இறுமாப்பல்ல , வேள்வி . இறுதி வெற்றி என்பது தமிழோடு கரைந்து விடாமல் காப்பாற்றிக் கொண்டதாகும் . எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்பது தமிழரின் குரல் . இந்தியரெல்லாம் அதனை எதிரொலிக்க வேண்டியது அவசியம் இல்லை . தமிழரைப் போல , ஸௌராஷ்ட்ரரும் தாய்மொழிப்பற்றுடையவர்கள் ! சீறிடும் தமிழைப்போல சீறிடும் ஸௌராஷ்டிரமும் ஒரு மொழி தான் . அதுவும் தாய்மொழிதான் , இந்தியர் என்ற பெயருக்குள்ளே ஸௌராஷ்டிரமும் அடங்கி விடுபவர்கள் தான் , என் தாய் உன் தாயை விடச் சிறந்தவள் என்பது எப்படி அறியாமையாகுமோ அப்படிப்பட்டதுதான் மொழி வெறியும் . என் தாய் உன் தாயைப் போன்றவர்தான் ஏனெனில் அவள் தாய் , இதுதான் இன்றைய அறிவுடைய மொழியறிஞரின் மொழிப்பற்று . அவ்வகையில் ஸௌராஷ்டிரர் தமிழிலும் வல்லவராகலாம் . சமஸ்கிருதத்திலும் திறமை பெறலாம் . அரேபிய மொழி அறிஞராகலாம் . ஆங்கிலேயனாக , ஜப்பானியனாக , ஜெர்மானியனாக அவரவர் மொழியைப் பேசுமளவிற்கு திறமை பெற்றவர்கள் ஸௌராஷ்டிரர் . இத்தகைய திறமையுடைய பல ஸௌராஷ்டிர இளம்சிங்கங்களை உலகமெங்கும் நான் சந்தித்திருக்கிறேன் . ஸௌராஷ்ட்ரப் பெண்கள் , சிறுமிகள் , கல்லூரிக்குமரிகள் பேரறிவு பெற்றிருக்கிறார்கள் . ஆண்களுக்குச் சற்றும் குறைந்தவர்களல்ல அவர்கள் . திறமைசாலிகள் மட்டுமல்ல , அன்பானவர்கள் , பண்பானவர்கள் , அழகனவர்கள் . அறிவுடையவர்கள் , ஏறத்தாழ பத்து ஆண்டுகள் ஸௌராஷ்டிர சொல்லகராதி தயாரிப்பில் ஈடுபட்ட போது அவற்றை நேரிலே கண்டு மகிழ்ந்தவன் என்ற முறையில் , தமிழுக்குரியத் துணை மொழியாக ஸௌராஷ்டிரத்தை ஏற்றுக் கொள்வதில் கூட எந்த இடற்பாடும் ஏற்பட்டு விடாது . மதுரை வாழ் மக்களின் தமிழுக்கு இணையாக ஸௌராஷ்டிரமும் பேசப்படும் காலம் வெகு தூரத்தில் இல்லை . இணைந்து வாழும் மனுக்குலம் ஒருவரின் தாய்மொழியை இன்னொருவர் கற்றுக் கொள்வதே பண்பு . அவ்வகையில் ஸௌராஷ்டிரர் அனைவருக்கும் தமிழ் தெரியும் . எத்தனைத் தமிழருக்கு ஸௌராஷ்டிரம் தெரியும் . இணைந்து வாழும் உலகில் ஏற்பு என்பது மொழியறிவில் இடம் பெற வேண்டும் . நாளைய உலகில் நாமனைவரும் ஒன்று , ஸௌராஷ்டிரமக்களுக்கு வாழ்த்துக் கூற எந்தத் தமிழரும் என்றும் தயங்கியதில்லை . தமிழகத்தில் வாழும் ஸௌராஷ்டிரர் தங்களின் மொழியை முதன்மைப்படுத்த வேண்டும் . மொழி முதல் என்பது பண்பாட்டுக்கான அடிப்படையாகும் . பண்பாட்டு இயக்கங்கள் தாய்மொழிக் கல்விக்கு முதலிடம் கொடுத்து பள்ளி முன் பருவக் குழந்தைகளுக்கான பாடசாலைகள் துவங்க வேண்டும் . உயர்நிலை , மேன்னிலைப் பள்ளிகளில் விருப்பப்பாடமாகவும் , தாய்மொழிக் கல்வியாகப் பள்ளிகளிலும் ஸௌராஷ்டிரம் பயில வாய்ப்பு உருவாக்க வேண்டும் . ஸௌராஷ்டிரப் பிரமுகர்கள் பெயரில் தலைவர்களாக வாழ வேண்டும் . வழிகாட்ட வேண்டும் . குபேரா ஏஜென்ஸி போல எத்தனையோ நிறுவனங்கள் இப்பணிக்கு உதவலாம் . திரு . ஓபுளா O.K. ராமானந்தம் போன்ற எத்தனையோ தனி மனிதர்கள் மொழிக்கு உதவலாம் . உதவுவார்கள் என்று நம்புகிறேன் .

Rev . ராபின்சன் லெவி, மொழி ஆய்வாளர், ரெலிக்ஸ் , 45 - C , கார்ப்பரேஷன் தெரு , அரசரடி , மதுரை .



Comments

Popular posts from this blog

ஸௌராஷ்ட்ர ஸுளு க்ரியா வல்லரி

caturbhasha vallari (Sanskrit,Saurashtra,Telugu and Tamil Dictionary)

Vikramaditya vetala Story in Sourashtrii