ஸௌராஷ்ட்ர பிராமணர்கள் நெசவுத்தொழில் செய்யக்காரணம் என்ன ? அத்தொழில் பிராமணர்களுக்கு உரியதா ? அதை சாஸ்திரம் ஆதரிக்குமா ?
விளக்கம் :-
அத்தியயனம்,அத்யாபனம்,யக்ஞம்,யாஜனம்,தானம்,
பிரதிக்ரஹம், என்னும் ஆறு தொழில் என்று ஸ்வாயம்பு மனுவால் விதிக்கப்பட்டது.
"யோகம்,தவம்,இந்திரியநிக்ரஹம்,தானம்,சத்யம்,சௌசம்,
தயை,சாஸ்திர விசாரணை,வித்யை,விஜ்ஞானம்,ஆஸ்திக்யம்” ஆகிய பத்தும் பிராமண கருமங்களென்று வஸிஷ்டஸ்ம்ருதியிலும்,
ஸமம் (மன அடக்கம்)
தமம் (புலனடக்கம்)
தவம் (விரதம்)
ஸௌசம் (மனதை உள்ளும் & வெளியிலும் தூய்மையாக வைத்துக்கொள்ளுதல்)
க்ஷாந்தி (பிறரால் இழைக்கப்படும் தவறுகளைப் பொறுத்துக் கொள்வது)
ஆர்ஜவம் (நேர்மை)
ஆஸ்திக்யம் (பக்தி)
ஜ்ஞாநம் (வேத சாஸ்த்ரங்களை கற்றல்)
விஜ்ஞாநம் (சாஸ்த்ரம் & உபதேசப்படி ஸாதனைகள் புரிந்து பரமாத்மாவை அனுபவிப்பது).
ஆகிய 9-ம் பிராம்மண கர்மங்களென்று ஸ்ரீமத் பகவத்கீதையிலும் சொல்லப்பட்டிருக்கின்றன.
கூடவிருந்து ஆசரணை கற்பித்து அதைத் தாமும் நடத்திக்காட்டுகிற
ஆசார்யர்களும்,வேதாத்யயனம் கற்பிக்கின்ற அத்யாபகர்களும்,யாகம்
பண்ணிவைக்கின்ற யாஜகாளும்(புரோஹிதர்), ஒரு பிராணிக்குத் தீங்கு
திரிகரணங்களாலுஞ்செய்யாமல் லோகோபகாரம் புரியும் சாதுக்களும், பொய் குரூரமான
வார்த்தை, தற்புகழ்ச்சி முதலியன வந்துவிடாமல் மிதமாயும் உண்மையாயும்
பிறருக்கு உபகாரத்தினி மித்தமாயும்,வேதோச்சாரணமாயும் பேசுகின்ற
முனிகளுந்தான் பிராமணர்கள்ளென்று (சத்தர்மசூத்திரம் 3.43 லும்)
கூறப்பட்டிருப்பதால் மேற்கூறிய தொழில்கள் பிராமணர்களுக்கு
ஏற்பட்டவையாகிறது.
இக்காலத்தில் மேலே சொன்ன கர்மங்களை அனுஷ்டிப்பவர்
மிகவும் அரிது. பூர்வத்தில் க்ஷத்திரிய அரசர்கள் பிராமணர்களுக்கென்று அநேக
தர்மஸ்தாபனங்களை ஏற்படுத்தி இருந்தார்கள். பிராமணர்கள் அதைப்பெற்று
வைதிகமார்க்கத்தை அனுஷ்டிக்க மனுவால் விதிக்கப்பட்ட ஷட்கர்மத்தை
யவலம்பித்து, அபவர்க்கமான மோக்ஷம் பெறுவதற்க்கு, பின் சொன்ன யோகாப்பியாஸம்
முதலியவைகளை அனுஷ்டித்தும் வந்தார்கள். மேற்சொன்ன இரண்டு மார்க்கத்திலும்
பழகியவர்கள் வசிஷ்டர் முதலான மஹரிஷிகள். அக்காலத்திலும் ராஜ்யக்ஷோபம்
முதலான ஆபத்காலத்தில் க்ஷத்திரிய வைசியத்தொழில் (யுத்தம்,வியாபாரம்
முதலியவை) களையும் செய்து வாழ வேண்டும் என்று யாஜ்ஞவல்க்ய ஸ்மிருதி 27.35
லும்.
உழுதல்
உருவகப்படுத்தல்
சித்திரம் எழுதல்
துணி
நெய்தல் முதலியன உபாத்யாயம்,சேவகம்,வியாபாரம்,வண்டிவைத்து
வாடகைக்குவிடல்,பிறர்மனதை திருப்த்திப்படுத்தல், மிகவும் செழிப்பாக புல்
பூண்டு மரம் நீர் நிறைந்த இடங்களுக்குப்போய் குடியேறுதல், பிரபுக்களிடம்
யாசித்தல், மலையிலுள்ள விறகுகளைக் கொண்டுவந்து நகரங்களில் விற்றல் ஆகிய
பத்து தொழில்கள் பிராமணர்களுக்கு ஆபத்காலத்தில் விதிக்கப்பட்ட
ஜீவனஹேதுக்கள் என்று ௸ ஸ்மிருதி ௸ 42 வது ஸ்லோகத்திலும் இதே விதியை
மனுஸ்மிருதி 10.116 லும் சொல்லப்பட்டுள்ளது.
அப்படியே ஸௌராஷ்ட்ரப்
பிராமணர்களுக்கும் ராஜ்ய க்ஷோபமான ஆபத்காலத்தில் சிலர் ஜோதிஷம்,வைத்தியம்
முதலான வித்தையையும், வஸ்திர நிர்மாணம், வியாபாரம் முதலான தொழில்களைச்
செய்தனர்.
மற்ற தொழில்களைக் காட்டிலும் நெய்யுந்தொழிலில்(கைத்தறிநெசவு)
பொய் புறட்டு முதலிய பாவங்கள் நேரிடாதென்று திருவள்ளுவரும் நெசவுத்தொழிலை
கைக்கொண்டார். மேலோர் ஆசாரமும் பிராமணர் சட்டமாகுமென்று மனுவும், மேலோர்
எதை எதை அனுஷ்டிக்கிறார்களோ ! அதையே சாதாரண சாதாரண ஜனங்களும்
அனுஷ்டிப்பார்கள் என்று ஸ்ரீ கிருஷ்ணபரமாத்மாவும் சொல்லியிருக்கின்றார்கள்.
ஆகையால் ஸௌராஷ்ட்ரப் பிராமணரில் பலர் செய்யும் நெய்யும்தொழில்
(கைத்தறிநெசவு) சாஸ்திரப் பிரமாணத்திற்கு விரோதமானதல்ல. !
Comments