Featured Post

ஸௌராஷ்ட்ர ஸுளு க்ரியா வல்லரி

ஸ்ரீரஸ்து ஸௌராஷ்ட்ர ஸுளு க்ரியா வல்லரி லிக்கெயொ என்.எ.எஸ். ரெங்க3ய்யான் பரிஷ்ருதம் டி.எஸ்.வெங்கடாசல ஸர்மொ மது4ரொ எக மோல் ஒண்டொ கலொ 1916   ஸ்ரீரஸ்து ஸௌராஷ்ட்ர ஸுளு க்ரியா வல்லரி ஸ்லோக் க்ரியாபநொ மெனத்தேடு தா4து பஸ்னு ப்ரயோகு3நு பு4ங்க்லோரூ டீப்குதாஸ்ஸாமூ லிங்கு3 கீ3ந்தெ3ஸ்வுவேலுநு உஸுகின் வெஸி ஹோஸ்ஸெத்லொ ஸுகின்ஸுன் மத்4யமாதி3னும் எஸீகின் யாஸீ கே3காலு கே3ம்விநா லிங்குபே4து3நீ: ஔதகாலுகு அந்தைகொ உகின்வெ உத்தமாகவை இநு மைதா2மு தைதா2மு நிர்லிங்கு3ம் ப3ஹுகேகவை || ஸ்ரீரஸ்து ஸௌராஷ்ட்ர ஸுளு க்ரியாவல்லரீ ஸௌராஷ்ட்ரும் தெ2வ்ட3க்ரியாநுகு தா4துக் கால பே4து3ன் விவரின் ஸங்க3த்திஸாநு கோ4ஷணொ. தா4துன் தி3ய்யொ ப்ரதா4நதா4து - பகுதி ஸஹாயதா4து - விகுதி ப்ரதா4நதா4து ஸஹாயதா4து க்ரியா பூர்த்தி ஜ ………….. வாஸு ……………….ஜவாஸு ஸி ……….. எஸி…………………….ஸியெஸி க2 ----------வாயி …………………க2வாயி க்ரியாபூர்த்தி வினைமுற்று காலுந் தீ2ந்யொ வர்தமாநகாலு - நிகழ்காலம் பூ4த காலு - இறந்தகாலம் ப4விஷ்யத்காலு - எதிற்காலம் வர்தமான காலு ஸு வெஸி ஸு ஸுன் ஸு ஸுன் ஸு ஸு பூ4தகாலு எஸி யாஸி எஸி யாஸி எஸி யாஸி இஸி யாஸி எஸி யெஸி ப4வ

Sourashtra Medhavi Sri T.M.RAMARAI (Short History)




ஸௌராஷ்ட்ர மேதாவி  
ஸ்ரீ தொ3ப்பென் மு. ராம ராய் அவர்களின் 
வாழ்க்கை & சாதனைகள் (வரலாறு)


ꢱꣃꢬꢵꢰ꣄ꢜ꣄ꢬ ꢪꢿꢤꢵꢮꢶ  ꢣꣁꢦ꣄ꢦꢾꢥ꣄.ꢪꢸ.ꢬꢵꢪꢬꢵꢫ꣄

 ஸௌராஷ்ட்ர மேதாவி  தொ.மு.ராமராய்  
  (தொ3ப்பென்.ராமராய் முனிஸௌளி)

           Sourashtra Medhavi  T.M.RAMARAI





மேதாவி ஸ்ரீ.ராம ராய் அவர்களின் வாழ்க்கை & சாதனைகள் (வரலாறு)


பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் உறுதியான ஒரு திருப்புமுனை அமைந்தது. ஸௌராஷ்ட்ர இனத்தின் பெரும்பகுதி தமிழ்நாட்டில் குடியேறி நல்ல வாழ்க்கைக்கு வழி வகுத்துக் கொண்டது. இக்கால கட்டத்தில் ஸௌராஷ்ட்ர குலத்தில் நிறைய மஹான்கள் தோன்றினார்கள். அவர்களுள் தாய்மொழி வளர்ச்சிப் பணியில் தமது உடல், பொருள், ஆவி அனைத்தையும் ஈடுபடுத்திய பேரறிஞர் தான் மேதாவி.தொ.மு.ராமராய் அவர்கள்



திரு. ராமராய் அவர்கள் மதுரையில் கி.பி. 1852  ம் ஆண்டில் பிறந்தார்.

இவரது குடும்ப பெயர்  ஜாபா3லி கோ3த்ரத்தைச் சேர்ந்த தொ3ப்பென் என்பதாகும். தந்தை முனிஸௌளி தாயார் மீனாக்ஷி.
சென்னையில் வாழ்ந்த இவர் இந்து மதத்தில் மாத்வா பிரிவைச்சேர்ந்தவார்(விரும்பியவர்). சென்னை ஃபிரீ சர்ச் மிஷன் கல்லுரியில் சேர்ந்து பௌதீகப்பிரிவை தனது விருப்ப பாடமாகத் தேர்ந்தெடுத்தார். அவர் தனது கல்வி பயிலும் காலத்தில் ஸமஸ்கிருதப் பேராசிரியர் திரு. கந்தா3ள்ளு. சதுர்வேதி பண்டிட் லட்சுமணாச்சாரியின் (துவைதி) சீடராகி அனைத்துவிதமான வேத சாஸ்திரங்களையும், இலக்கணம், அகராதி, சந்தம் ஆகியவற்றை முற்றிலுமாக நன்கு பயின்று அனைத்திலும் மிகவும் சிறந்தவராகத் தேர்ச்சி பெற்றார்.. இவரது திறமையை மெச்சி இவரது ஆசிரியர் இவருக்கு ‘தீர்த்தர்’ எனும் பட்டத்தை வழங்கினார். சென்னைக்கல்லுரியில் முதல் மாணவராக விளங்கினார். அக்கல்லூரி முதல்வர் ஸௌராஷ்டிரர்களின் மொழி மற்றும் பண்பாடு ஆகியவற்றை கற்க முன் வந்தார். ராமராய் தனது ஆரம்பகாலத்திலிருந்தே ஸௌராஷ்ட்ர மொழி, பண்பாடு பற்றிய சந்தேகங்களுக்கு விளக்கங்கள் கொடுக்கத்துவங்கினார். இதனைத் தொடர்ந்து 1880 ல் ஆராய்ச்சியில் ஈர்க்கப்பட்டு தனது பதிவுத்துறை பதவியைத் துறந்தார். பிறகு, ஸமஸ்கிருதம், பாலி,மராத்தி, குஜராத்தி, வங்காளம், காஷ்மீரி, ஹிந்தி, உருது, ஒரியா, தெலுங்கு, கன்னடம்,மலையாளம், கிரந்தம் ஆகிய மொழிகளைக் கற்பதில் தன்னை ஈடுபடுத்திகொண்டார்.
ஸௌரசேனி, மாகதி, பைச்சாசி, ச்லிக பைசாசி, அபப்பிரம்ஸா போன்ற பிரகிருத மொழி மற்றும் மொழியியல் கூறுகளான ஒலியியல் ஆகிவற்றை முழுமையாக கற்றதுடன் அஸ்ஸாமி, நேபாளம், ஃப்ரஞ்சு, சின்ஹளா, பர்மியமொழி ஆகியவற்றை பேசும் திறனையும் பெற்றார். அவரது குடும்பச் சொத்து ரூபாய் ஒரு லட்சம் என மதிப்பிடப்பட்டது. அதன் பெரும் பகுதியை தனது தந்தையின் அனுமதியுடன் ஸௌராஷ்ட்ரம் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டார்.


1882-ல் ஸ்ரீ வில்லிப்புத்தூர் கோடிகன்னிகாதான ஸ்ரீ ஸ்ரீனிவாச தாதாச் சாரியார் & ஸ்ரீ கிருஷ்ணசுவாமி தாதாசாரியார் ஆகியோரின் ஸௌராஷ்டிரர்களைப்பற்றிய சொற்பொழிவின் அடிப்படையில் ‘ஸௌராஷ்டிர ஜனமனோரன்ஜனி’ என்ற சிறிய புத்தகத்தினை வெளியிட்டார்.



நீதி போதனை ரீதியில் ’ஸௌராஷ்டிர நீதி ஸம்பு’ வை வெளியிட்டார்.

இந் நூல், லண்டன் இந்திய ஆபிஸ் லைப்ரரி லைப்ரரியன் டாக்டர்.ஹெச்.என்.ராண்டில், எம்.,ஏ.,டிஃப்பில், ஐ.ஈ.எஸ் அவர்களை மிகவும் கவர்ந்தது. இதே ராண்டில் என்பவர்தான் நமது மொழியை ஆழமாகப்பயின்று ஸௌராஷ்டிர பாஷை குறித்து ஆய்வுக்கட்டுரைகளை உலகப்புகழ் பெற்ற சஞ்சிகைகளில் அவற்றை வெளியிட்டார். இதேபோன்று 1944-ல் லண்டனிலிருந்து வெளிவரும் ஜேர்னல் ஆஃப் ராயல் ஏசியாடிக் சொஸைட்டி என்னும் சஞ்சிகையில் தென்னிந்திய ஸௌராஷ்டிரர்களைப் பற்றிய வரலாற்றை வெளியிட்டார். இதற்கு திரு. தொ3ப்பென்.மு.ராமராய் அவர்களின் தகவல்களும் தூண்டுதலும் மிக முக்கிய காரணங்களாக இருந்தன.


மேதாவி. ராமராய் அவர்களது தொலைநோக்கு அற்புதமானது. எதிர்காலம் கணிப்பொறி மயமாகும் என்பதை அவர் நிச்சயமாக அறிந்திருந்தார். அதனால் தான் விஞ்ஞான வளர்ச்சிக்கு ஈடு கொடுத்துப் பயன்படும் வகையில் ஸௌராஷ்ட்ர மொழிக்கெனச் சீர்திருத்திய தனி வரி வடிவத்தை உருவாக்கித் தந்திருக்கிறார். இன்று கணிப்பொறியில் ஸௌராஷ்ட்ர எழுத்துக்கள்  சக்கைபோடு போட்டுக்கொண்டு வலம்வருகின்றன. ஸௌராஷ்ட்ரர்கள் மட்டுமின்றி மற்றவர்களும் வெளிநாடுகளிலும் ஸௌராஷ்ட்ர மொழியினை அதற்குரிய வரிவடிவத்தில் படிப்பதற்கும் எழுதுவதற்கும் கற்பதற்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. கணிப்பொறியில் தனிப்பக்கமும் இண்டெர்நெட் இணைப்பும் ஸௌராஷ்ட்ர மொழியின் உலகளாவிய வளர்ச்சிக்கு உதவி புரிகின்றன.



திரு ராமராய் அவர்கள் சுமார் 30,000 ஸ்லோகங்களையும் 32 புத்தகங்களையும் வெளியிட்டார்( 10 கிடைக்கப் பெற வில்லை). இந்த 22-ல், 12 புத்தகங்களை அச்சில் காண்கின்றோம். சேலம் புட்டா மற்றும் வேங்கட்சூரி ஆகியோருக்கு நிகராகக் கருதப்படுகின்றார்.



பண்டைய ஸமஸ்கிருத இலக்கண ஆசிரியர் பாணிணீ அவர்களின் அடிச்சுவட்டைபின்பற்றி இவர் புகழ் பெற்ற ஸௌராஷ்ட்ர இலக்கணத்தை ‘வியாக்கரணம்’ ‘நந்தி நிகண்டு’ என்ற பெயர்களில் வெளியிட்டார்.

ஸௌராஷ்டிர எழுத்துக்களில் (லிபியில்) புத்தகங்களைவெளியிட “matrix’ எனும் எழுத்துக்களை ஈயத்தில் உருவாக்கினார். தொப்பென்.மு.ராமராய் அவர்கள் இந்த ‘matrix’ எழுத்துக்களைக்கொண்டு அச்சிடுவதற்கான உபாயத்தை மேற்கொண்டு 32 புத்தகங்களை வெளியிட்டார். அவரின் வெளியீடுகளில் சில பின் வருமாறு:


ஸௌராஷ்டிர போதினி (1880),

பிரிமியர்,
நீதி ஸம்பு,
ஸௌராஷ்ட்ர முதல் புத்தகம்,
ஸௌராஷ்ட்ர இரண்டாம் புத்தகம்,
வியாக்கரணம்,
நந்தி நிகண்டு,
சதுர் பாஷா வல்லரி (1908),
சதுர் வேத சந்தியாவந்தனம்,
ஸௌராஷ்டிர ஜனோமனோரன்ஜனி (ஸௌராஷ்டிர, தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் ஆகிய மொழிகளில்),
ஸௌராஷ்டிர வரலாறு(1891),
வசன ராமாயணம்,
பூலோகவிவரன்ணம்,
ஹிந்துதேசி லகு சரித்திரோ,’’ ’’லகு ஸங்கியாவளி’,
லகு வியாகரணம்,
பஞ்சரத்தினம்-(பகுதி 1),
ததுரூபாவளி,
பாலராமாயணு,
சுலுகிரியா வல்லரி,
ஸ்ரீ பாகவதோ,
ஸ்ரீ பரதோ,
துலா காவேரி மஹிமோ,
 சந்தசு, அலம்பரோ   இதை தவிர தமிழ், தெலுங்கு,ஸம்ஸ்க்ருதம், ஸௌராஷ்ட்ரம் ஆகிய நான்கு மொழி சொற்தொகுப்பாக சதுர்பாஷா வல்லரி எனும் நூலையும் இயற்றி வெளியிட்டுள்ளார்.


ராமராய் அவர்கள் இயற்றிய ‘ராமராயின்’ ‘First Catechism of Sourashtra Grammar’ என்னும் நூலுக்கான விளக்கத்தினை பேராசிரியர். வீ.ஏ.தேவேந்திரன் எம்.ஏ.,(ஸமஸ்கிருதம்) அவர்கள் மிக அருமையாக விளக்கியுள்ளார்.

இவர் பனை ஓலைகளிலும் வேறு விதங்களில் கிடைக்கபெற்ற, சுகந்த தூபதீர்தார்யர், சதுர்வேதி லக்ஷ்மணாச்சாரியார்,ஸ்ரீனிவாச்சாரியார்,ஸ்ரீமத் வேங்கடசூரி,சேலம்புட்டா அழகார்யார் ஆகியோரின் இலக்கியப்படைப்புக்களை வெளியிட்டார்.
ஸ்ரீ ராமராயின் நீதி சம்புவை பிற மொழிகளில் கீழ் காண்போர் வெளியிட்டுள்ளனர்:
(1) வங்காளத்தில்- இந்தியாவின் பழம்பெறு மொழியியல் அறிஞர் ஸ்ரீ.எஸ்.கே.சாட்டர்ஜீ
(2) குஜராத்தில் – பி.ஜி. ஷா, பாம்பே
(3) மராத்தியில்- ஆர்.என்.தண்டல்கார் & ஐ.ஹெச்.சின்சில்கர்,பூனா.


தொப்பென்.மு.ராமராய் அவர்களுக்கு ஆண் வாரிசு இல்லாததால் தனது இலக்கியப் படைப்புக்களையும் ஸௌராஷ்டிர எழுத்துக்களில் அச்சிட உதவிய’மேட்ரிக்ஸ்’ எனும் ஈயாத்தாலான் உபகரணங்களையும் மதுரை ஸௌராஷ்டிர சபையிடம் ஒப்படைத்தார்;இதற்காக இச்சபையினர் இவருக்கு ஆயுட்கால் ஓய்வூதியமும் வழங்கினர்.ஆனால் இவரது எழுத்துக்களை விரும்பாது நாகரி எழுத்துக்களை பரப்பவிரும்பிய சபை நிர்வாகத்தினரில் சிலர் ராமராய் அவர்கள் தயாரித்த (மேட்ரிக்ஸ்”-ஐ உருத் தெரியாமல் உருக்குலைத்து விட்டனர் என்ற அதிர்ச்சி தரும் செய்தியை திரு. சேதுராமன் அவர்களின் வரலாற்றுப்புத்த்த்தில் காணலாம் (2008:139

எனினும் சமூகமக்கள் ஸௌராஷ்டிர எழுத்துக்களைத் தவறாமல் தொடர்ந்து பயன்படுத்தி வரத்தவறவில்லை.


மதுரையில் உள்ள ஸ்ரீ பிரசன்னவேங்கடேஸ்வர பெருமாள் கோவில் கர்பக்கிரஹ சுவர்களில் காண்கின்றோம். (ஜீவ்-தனுன்). நீதி சம்புவின் 12வது சுலோகமும் ஸ்ரீ காயித்திரி யந்திரம் ஆகியவை ஸௌராஷ்டிர எழுத்துக்களில் காணலாம்.




Madurai Sri Prasanna Venkatesa Perumal Temple, Sourashtra Script Inscriptions 





ஸௌராஷ்டிர எழுத்தில் உருவாக்கப்பட்டுள்ள ‘ஸ்ரீ சக்கரம்’நிழற்படத்தை’ திருச்சி(உறையூர்) கே.ஏ.ரெங்கராஜன் அவர்களின் ‘தென் இந்திய ஸௌராஷ்டிர சமூக வரலறு’ –பக்.125-ல் காணலாம்.



திரு.தொ3ப்பென்.ராமராய் அவர்கள்  சிலகாலம் மதுரையில் தங்கி இருந்த போது ஸ்ரீமந் நடனகோபால நாயகி ஸ்வாமியைச் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. உடனே தாய்மொழிப் பற்றை ஊட்டும் பாடல்களை இயற்றும் படி நாயகி ஸ்வாமிகளிடம் திரு.ராமராய் அவர்கள் வேண்டிக்கொண்டார். நாயகி ஸ்வாமிகளும் “”  பா4ஷாப4க்தி நீ:ஸ்தெனொ பா4த் நீ:ஸ்தெ பொ4ன்னொ”” போன்ற பாடல்களைப் பாடி ஸௌராஷ்ட்ர மொழி வரலாற்றில் எழுச்சியும் வேகமும் உண்டாக்கினார்.



ஸ்ரீ தொப்பென். ராமராய் அவர்களின் உருவ சிலையை ஸ்ரீ பிரசன்ன வேங்கடேஷ பெருமாள் கோயிலில் (தெற்கு கிருஷ்ணன் கோயில், வெட தௌ4ரொ) வில் ஆண்டாள் சந்நதி முன்புற தூணில் காணலாம்.






ஸௌராஷ்ட்ர மேதாவி ஸ்ரீ தொ3ப்பென் மு. ராமராய் அவர்கள் இயற்றி வெளியிட்ட பாடநூல்களின் புகைப்படங்கள் சில :



















புராதன ஸௌராஷ்ட்ரமொழி எழுத்துக்கள்














‘Sourashtram’ has a rich cultural tradition in the matter of Lipi having been developed by Medhavi T.M.Ramarai (1852-1913). We have rich literature in the form of Ithihasas like Ramayana, Mahabharatha as well our Holy text Bhagavat gita in various Indian scripts.But, hereafter, we need a standardized script which is solely the property of the Sourashtras. In this respect we have only the script as developed by Medhavi T.M.Ramarai for SOURASHTRAM which has already been recognized by the Govt.of India as late as 1981 and hence has now become the cultural identity of the Sourashtras.It has now the UNICODE facility,too. So we want a concerted effort to put into daily use our own Lipi. This can be attained through this group. Hence we invite every sourashtra to join this group and strive to preserve and develop our own script which is in use from 1880 A.D



80 ஆண்டுகளுக்கு முன்பு ஸௌராஷ்ட்ர மொழியில் 
ஸௌராஷ்ட்ர எழுத்தில் 
எழுதப்பட்ட ஸ்ரீ குபேர யந்திரம்






Comments

UPAMANYUOSS said…
A good write up about Medhavi T.M.Rama Rai, who was instrumental in making Sourashtra Language as a Literary language having its own script. He knew that Devanagari script is not suitable to write Sourashtra Language and hence he used only Sourashtra script. It is now included in Unicode as Saurashtra (SAZ).
Unknown said…
A great thing to publicise Saurashtra Language in this troubled time. A very pleasant presentation of the life history of Medavi Ramarai todays youngsters and also to those who want a different script for our language to know realthing.
Mohanram Ruppa

Popular posts from this blog

64 Sourashtra Gothram & Family Names

ஸௌராஷ்ட்ர ஸுளு க்ரியா வல்லரி